இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

India vs England: கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நாளை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோத உள்ள நிலையில் பிட்ச் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 /6

கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இன்னும் மொத்தமாக 3 போட்டிகள் மட்டுமே உள்ளன. இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், சவுத் ஆப்ரிக்கா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

2 /6

இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை ஜூன் 27 அன்று அரையிறுதியில் மோத உள்ளது. 2022 டி20 உலக கோப்பைக்கு இந்தியா பலி தீர்க்குமா என்று பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

3 /6

கயானாவில் நடைபெற உள்ள இந்த மைதானத்தில் கடந்த 18 நாட்களாக எந்த ஒரு போட்டியும் நடைபெறவில்லை. இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே உள்ளது.

4 /6

இந்தியா மற்றும் இங்கிலாந்து விளையாடும் இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸின் சராசரி 145.6 ஆக இருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் அது 77.4 ஆக உள்ளது.

5 /6

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்காலும். அதே சமயம் இங்கிலாந்தில் அடில் ரஷித் மற்றும் மொயின் அலி இந்தியர்களின் விக்கெட்களை எடுக்க கூடும்.  

6 /6

இதுவரை இந்த மைதானத்தில் 18 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் செய்த அணி 6 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது.