இந்தியாவில் சட்டப்பூர்வமாக வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்?

Income Tax Department: இந்தியாவில் பல சட்ட விதிமுறைகள் உள்ளது.  வீட்டில் பணத்தை வைத்துக் கொள்ள வருமான வரித்துறை வரம்பு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - RK Spark | Last Updated : Mar 6, 2024, 12:56 PM IST
  • பணத்திற்கு முறையான ஆதாரம் முக்கியம்.
  • இல்லை என்றால் வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
  • சில சமயங்களில் கைதும் செய்யப்படலாம்.
இந்தியாவில் சட்டப்பூர்வமாக வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்? title=

Income Tax Department: நாம் தினசரி செய்திகளில் பல முக்கிய பிரபலங்கள் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்று படித்திருப்போம், இதனை நாம் கடந்து சென்றாலும் ஒரு சிலருக்கு நாம் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல் தெரியாமல் உள்ளது. நமது வீட்டில் கணக்கில் வராத பணத்தை வைத்திருந்தால் நாம் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. பணமாக மட்டுமின்றி தங்க நகைகள், வைர நகைகள் அல்லது விலை உயர்ந்த பொருள்களாக வைத்திருந்தாலும் அதற்கு முறையாக கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதிகாரிகளின் கேள்விக்கு நாம் ஆளாக வாய்ப்புள்ளது. நமது வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்து இருக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ஸ்விகியுடன் கைக்கோர்த்த IRCTC! இதனால் பயணிகளுக்கு என்ன பயன்?

இந்தியாவில் உள்ள சட்ட விதிகளின்படி ஒரு தனி நபர் வீட்டில் இவ்வளவு பணம் தான் வைத்திருக்க வேண்டும் என்ற எந்த ஒரு விதிகளும் இல்லை, ஆனாலும் அதற்கு முறைப்படி டிடிஎஸ் அல்லது வரி செலுத்தி இருக்க வேண்டும். வருமான வரியில் காட்டப்படாத தொகை வீட்டில் இருந்தால் மட்டுமே தனிநபர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு தனிநபர் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்று வருமான வரிச் சட்டம் எதுவும் குறிப்பிடவில்லை. தனிநபர்கள் தங்கள் பணத்தை முறையாக ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட அளவு பணத்தை வைத்திருக்க முடியும். 

வருமான வரிச் சட்டம், 68 முதல் 69பி வரையிலான பிரிவுகளில் விவரிக்கப்படாத வருமானம் குறித்த வெளிப்படையான விதிகளைக் கொண்டுள்ளது.  ஒரு தனிநபரிடம் கணக்கில் வராத தொகை இருந்தால், வருமான வரி அதிகாரிகள் அந்த நிதியின் ஆதாரம் குறித்து விசாரணையைத் தொடங்கலாம், இதற்கு அந்த தனிநபரிடம் விரிவான விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கும்.  கணக்கில் காட்டப்படாத சொத்து, பணம், நகை கண்டுபிடிக்கப்பட்டாலோ, அல்லது வேறு ஏதேனும் முறையில் கூடுதல் சொத்து இருந்தாலோ நீங்கள் கைது செய்யப்பட்வும் வாய்ப்புள்ளது.  "கணக்கில் வராத நிதிகளின் ஆதாரம் பற்றிய திருப்திகரமான விளக்கத்தை அளிக்கத் தவறினால், வருமானவரித்துறை அதற்கு கூடுதல் அபராதங்கள் விதிக்க அனுமதி உள்ளது” என்று வருமானவரித்துறை அதிகாரி மேலும் கூறி உள்ளார்.

வருமான வரிச் சட்டங்களிலோ அல்லது ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளிலோ நீங்கள் வீட்டில் வைத்திருக்கக்கூடிய பணத்தின் அளவு குறித்து எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.  இருப்பினும், நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன என்று மேலும் ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.  "நீங்கள் ஒரு தொழிலில் ஈடுபட்டு உள்ளீர்கள் என்றால், அதில் உள்ள வரவு செலவுகள் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும் தொழிலில் ஈடுபடாதவர்கள் கூட அவர்கள் வீட்டில் உள்ள பணத்திற்கு ஆதாரத்தை வைத்திருக்க வேண்டும். அது வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட பணமாக இருக்கலாம் அல்லது நீங்கள் பெற்ற பரிசு தொகையாக கூட இருக்கலாம்.  ஆனால் அதற்கான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும்.  ரொக்கம் பரிசு பெறுவது அல்லது சொத்து பரிவர்த்தனையைக் குறித்து சில விதிகள் உள்ளன. ரூ. 2 லட்சத்திற்கு மேல் தனி நபர் பணமாக பெற கூடாது என்ற விதியும் உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | விமான டிக்கெட்களை குறைந்த விலையில் பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News