மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம், மக்கள் BS6 மற்றும் Ola, Uper போன்றவை தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். இச்சந்திப்பின் போது மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது என்ன? மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கினார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்., "மோட்டார் வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பல காரணங்களால் பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை மீட்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி ரூபாயாக உயர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாகவே சிறிய வங்கிகள் இணைப்பு நிகழ்ந்துள்ளது. 5 லட்சம் கோடி பொருளாளார வளர்ச்சியை அடைய சிறிய வங்கிகள் இணைப்பு உதவும். வங்கிகள் இணைப்பு நடைமுறைக்கு வரும் தேதி குறித்து அந்தந்த வங்கி வாரியம் முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியப்படி சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கருத்தை கேட்டே நீக்கம் செய்துள்ளோம். ஒரு சட்டம் இருக்கிறது என்றால் பொதுமக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். ஆனால் 370 உபயோகமாக இல்லை. ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து நாங்கள் கூறியுள்ளோம். இது ஜன சங்கம் காலம் முதல் எங்களின் கொள்கை. இந்த சட்டத்தை நீக்கியதால் ஜம்மு காஷ்மீரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பல மாநிலங்களில் இருந்து முதலீடு பெருகும் எனவும் அவர் தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக நிதி உதவி வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி தவிர, ஓய்வூதியமாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவசியமற்ற 58 சட்டங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
GDP வளர்ச்சி விகிதத்தை அடுத்த காலாண்டில் உயர்த்துவதில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. GST வருவாய் வசூல் குறித்து கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம். மேலும் நமது நோக்கம் மற்றும் பணியை விரிவுபடுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.
அதேப்போல் வேலையிழப்பு பிரச்சினையை சரிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அதிகாரிகள் பொருளாதார துறையினருடன் தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.