உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு விலையுயர்ந்த வாட்சை பரிசளித்த சிவகார்த்திகேயன்!

இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

1 /6

இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

2 /6

குகேஷுடன் அவரது குடும்பத்தினர், வேலம்மாள் கரஸ்பாண்டண்ட் வேல்மோகன் மற்றும் டெபுடி கரஸ்பாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோரும் உடன் இருந்தனர்.

3 /6

சிறுவயதிலிருந்தே நடிகர் சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகரான குகேஷ் அவரிடமிருந்து மறக்க முடியாத பரிசாக ஒரு விலையுயர்ந்த வாட்ச் பெற்றார்.

4 /6

குகேஷின்  சாதனையை பாராட்டிய சிவகார்த்திகேயன், இது மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களுக்கான உத்வேகம் என்றார்.

5 /6

மேலும், குகேஷின் இந்த வரலாற்று வெற்றியைக் கொண்டாட கேக் வெட்டி சிறப்பித்தார் சிவகார்த்திகேயன்.  

6 /6

நம் தேசத்தை பெருமைப்படுத்தும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது.