IRDAI அளித்த நல்ல செய்தி: பாலிசியை கேன்சல் செய்யணுமா? இனி அதற்கும் ரீஃப்ண்ட் கிடைக்கும்

Insurance Policyholders: பாலிசிதாரர் பாலிசியை ரத்து செய்தால், ரத்து செய்வதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டியதில்லை என இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 12, 2024, 03:08 PM IST
  • IRDAI தொடர் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
  • பாலிசியை ரத்து செய்வதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியதில்லை.
  • ஆவணங்கள் இல்லாததால் கோரிக்கையை நிராகரிக்க முடியாது.
IRDAI அளித்த நல்ல செய்தி: பாலிசியை கேன்சல் செய்யணுமா? இனி அதற்கும் ரீஃப்ண்ட் கிடைக்கும் title=

Insurance Policyholders: பாலிசிதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அவர்களுக்கான பல விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. ரீடெய்ல் பாலிசிதாரர்கள் காப்பீட்டு காலத்தில் எப்போது வேண்டுமானாலும், காப்பீட்டாளரிடம் தெரிவித்து, பாலிசியை ரத்து செய்து , மீதமுள்ள பாலிசி காலத்திற்கான பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) தெரிவித்துள்ளது.

பாலிசியை ரத்து செய்வதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியதில்லை

பாலிசிதாரர் பாலிசியை ரத்து செய்தால், ரத்து செய்வதற்கான காரணத்தை அவர் தெரிவிக்க வேண்டியதில்லை. ஏதாவது மோசடி நிரூபிக்கப்பட்டால், சில்லறை பாலிசிதாரருக்கு குறைந்தது ஏழு நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளித்து, மோசடியின் அடிப்படையில் மட்டுமே காப்பீட்டாளர் பாலிசியை ரத்து செய்ய முடியும்.

IRDAI தொடர் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது

செவ்வாயன்று, இந்தத் துறையில் தொடர்ச்சியான சீர்திருத்தங்களை அறிவித்த ஐஆர்டிஏஐ, காப்பீட்டாளர்கள் அனைவரும் ஒரு ரீடெய்ல் பிராடெக்டை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது. 

காப்பீட்டாளர் பிரீமியத்தைத் திருப்பித் தர வேண்டும்

வாடிக்கையாளர் பாலிசியை ரத்து செய்தால், பாலிசி கால அளவு ஒரு வருடம் வரை இருந்து, பாலிசி காலத்தின் போது எந்த க்ளெய்மும் செய்யப்படவில்லை என்றால், காலாவதியான பாலிசி காலத்திற்கான விகிதாசார பிரீமியத்தை காப்பீட்டாளர் திரும்ப செலுத்த வேண்டும்.

முதன்மை சுற்றறிக்கையில், ஒரு வருடத்திற்கும் மேலான காலவரையறை கொண்ட பாலிசிகளுக்கு, பாலிசி காலம் காலாவதியாகும் முன் பிரீமியத்தைத் திரும்ப அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஆவணங்கள் இல்லாததால் கோரிக்கையை நிராகரிக்க முடியாது

ஆவணங்கள் இல்லாததால் எந்தவொரு கோரிக்கையையும் நிராகரிக்கக்கூடாது என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. முன்மொழிவை அண்டர்ரைட் செய்யும் போது தேவையான அனைத்து ஆவணங்களையும் பெற வேண்டும். க்ளெய்ம் செட்டில்மெண்டுடன் தொடர்புடைய ஆவணங்களை மட்டுமே வாடிக்கையாளர் சம்ர்ப்பித்தால் போதும். அந்த ஆவணங்களில் க்ளைம் படிவம், ஓட்டுநர் உரிமம், அனுமதி, உடற்தகுதி, FIR, தீயணைப்புப் படை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை, கணக்குப் புத்தகங்கள், ஸ்டாக் ரெஜிஸ்டர், ஊதிய ரெஜிஸ்டர் பழுதுபார்த்தலுக்கான கட்டணங்கள் ஆகியவை அடங்கும். 

மேலும் படிக்க | 432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!

கட்டாய காப்பீட்டை ரத்து செய்ய முடியாது

இரட்டைக் காப்பீடு அல்லது மொத்த நஷ்டம் தவிர, எந்தச் சூழ்நிலையிலும், சட்டப்பூர்வ மோட்டார் மூன்றாம் தரப்புப் பொறுப்புக் காப்பீட்டையோ அல்லது சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட வேறு ஏதேனும் கட்டாயக் காப்பீட்டையோ காப்பீட்டாளர் ரத்து செய்ய முடியாது என்று IRDAI கூறியது.

வாடிக்கையாளருக்கு CIS வழங்கப்பட வேண்டும்

அனைத்து சில்லறை வாடிக்கையாளருக்கும் அனைத்து பாலிசிகளுடனும் வாடிக்கையாளர் தகவல் தாள் (CIS) வழங்கப்பட வேண்டும் என்று IRDAI கூறியுள்ளது. இதில் கொள்கையின் அடிப்படை அம்சங்கள் எளிய வார்த்தைகளில் விளக்கப்பட்டுள்ளது. இதில் கவரேஜ்ஜின் வரம்பு, ஏட்-ஆன், அடிப்படைத் தொகை, உறுதியளிக்கப்பட்ட தொகை, விலக்குகள், சிறப்பு நிபந்தனைகள் மற்றும் உத்தரவாதங்கள், ஒப்புதல்கள், க்ளெய்ம் நடைமுறை பற்றிய தகவல்கள் மற்றும் செயலாக்கம் பற்றிய சுருக்கமான தகவல்கள் இருக்க வேண்டும்.

பொதுக் காப்பீட்டுத் தயாரிப்பின் கீழ் ரிபோர்ட் செய்யப்பட்ட, 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட (மோட்டார் காப்பீட்டில்) மற்றும் ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட (மோட்டார் இன்சூரன்ஸ் தவிர மற்றவற்றில்) இழப்புகள், பதிவு செய்யப்பட்ட சர்வேயர் மற்றும் இழப்பு மதிப்பீட்டாளரால் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என்று IRDAI கூறியது. 

மேலும் படிக்க | Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News