EPFO New Rules: EPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 வரை போனஸ்!

லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் கீழ் ரூ. 5,000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 பலனைப் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Aug 1, 2022, 06:30 AM IST
  • பிஎஃப் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை.
  • லாயல்டி-கம்-லைஃப் மூலம் பணியாளர் ஓய்வு பெறும் போது ரூ.50,000 வரை பலன் பெறலாம்.
  • வேலை மாறினாலும் ஒரே எண்ணில் பணியாற்ற வலியுறுத்தப்படுகிறது.
EPFO New Rules: EPF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 வரை போனஸ்! title=

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) உறுப்பினர்களுக்கு பிஎஃப் கணக்கு தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை, இதனால் அவர்கள் சில நன்மைகளை பெற்றுக்கொள்ளமுடியாமல் போய்விடுகிறது.  இடிஎல்ஐ திட்டத்தின் கீழ் 7 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம், வருமான வரி விலக்கு போன்ற விதிகள் பெரும்பாலான உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.  அதேசமயம் இதுமட்டுமின்றி லாயல்டி-கம்-லைஃப் போன்றவற்றின் நன்மைகளும் அவர்களுக்கு இருக்கின்றனர், இதன் மூலம் பணியாளர் ஓய்வு பெறும் போது ரூ.50,000 வரை பலன் பெறலாம்.  மேலும் அனைத்து இபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களும் பழைய வேலையிலிருந்து புதிய வேளைக்கு மாறிய பிறகும், அதே இபிஎஃப் கணக்கில் தொடர்ந்து செயலாற்ற வலியுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | ATM vs Debit Cards: இரண்டு கார்டுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா?

உறுப்பினர்கள் 20 வருடங்கள் தொடர்ந்து ஒரே கணக்கில் பங்களித்த பிறகு, அவர்கள் லாயல்டி-கம்-லைஃப் பலன்களைப் பெறலாம்.  இதுகுறித்து நிபுணர் குழு கூறுகையில் இபிஎஃப்கணக்கில் 20 ஆண்டுகளாக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாயல்டி-கம்-லைஃபின் பலனை நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, தகுதி பெற்ற ஒருவருக்கு கூடுதல் போனஸாக ரூ.50,000 வரை கிடைக்கும்.  லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் கீழ் ரூ. 5,000 வரை அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 பலனைப் பெறுவார்கள்.  அடிப்படை சம்பளம் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்களுக்கு நன்மை கிடைக்கிறது.

இந்த போனஸ் தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ள செய்யவேண்டியது வேலை மாறினாலும் நீங்கள் உங்கள் பழைய கணக்கிலேயே தொடர வேண்டும் மற்றும் இதுகுறித்து உங்கள் பழைய முதலாளி மற்றும் தற்போதைய முதலாளியிடம் விவரத்தை தெரிவிக்க வேண்டும்.  மேலும் பணியில் இருக்கும்போது பிஎஃப்-ஐ  திரும்பப் பெறாமல் இருப்பது நல்லது.

மேலும் படிக்க | EPFO New Update: EPFO வெளியிட்டுள்ள முக்கியமான 5 புதிய விதிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News