EPFO Alert: இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள், எச்சரிக்கும் இபிஎஃப்ஒ

EPFO Alert: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருக்கும் எவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று இபிஎஃப்ஓ ​​அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 29, 2022, 03:01 PM IST
  • இபிஎஃப்ஓ அதன் அனைத்து பயனர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காதீர்கள்: இபிஎஃப்ஓ
  • பான் எண், ஆதார் எண், யுஏஎன் மற்றும் உங்கள் பிஎஃப் கணக்கு எண் ஆகியவற்றை பகிரக்கூடாது.
EPFO Alert: இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள், எச்சரிக்கும் இபிஎஃப்ஒ title=

இபிஎஃப்ஓ எச்சரிக்கை: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அதன் அனைத்து பயனர்களுக்கும் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருக்கும் எவரும் தவறுதலாக சமூக ஊடகங்களில் கணக்கு தொடர்பான தகவல்களைப் பகிரக்கூடாது என்று இபிஎஃப்ஓ ​​அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. 

அப்படி செய்தால், கணக்கு வைத்திருப்பவர்கள் பெரிய மோசடிகளுக்கு ஆளாக நேரிடும் என இபிஎஃப்ஓ எச்சரித்துள்ளது. இபிஎஃப் கணக்கு பற்றிய தகவல்கள் மோசடி செய்பவர்களின் கைகளுக்கு சென்றால், அவர்கள் உங்கள் கணக்கில் இருந்து பணத்தை திருட வாய்ப்பு கிடைக்கும் என இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. 

இபிஎஃப்ஓ தனது உறுப்பினர்களிடம் ஆதார், பான், UAN, வங்கி விவரங்கள் பற்றிய தகவல்களை ஒருபோதும் கேட்காது என்று இபிஎஃப்ஓ ​​கூறியுள்ளது. தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் இதுபோன்ற தகவல்களை யாராவது கேட்டால், கவனமாக இருங்கள், அந்த தகவல்களை கசியவிடாதீர்கள் என இபிஎஃப்ஓ கேட்டுக்கொண்டுள்ளது. இதுபோன்ற மோசடி தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காதீர்கள், அத்தகைய செய்திகளுக்குப் பதிலளிக்காதீர்கள் என இபிஎஃப்ஓ கூறியுள்ளது.

மேலும் படிக்க | EPFO: இபிஎஃப்ஓ நாமினியை மாற்ற வேண்டுமா, இந்த வழியில் எளிதாக செய்யலாம் 

இபிஎஃப்ஓ தகவல் கொடுத்தது

இபிஎஃப்ஓ, தனது அனைத்து பயனர்களையும் எச்சரிக்கு வகையில் ட்வீட் செய்து, 'ஆதார், பான், யுஏஎன், வங்கி கணக்கு அல்லது ஓடிபி போன்ற தனிப்பட்ட விவரங்களை தொலைபேசி அல்லது சமூக ஊடகங்களில் பகிருமாறு இபிஎஃப்ஓ சார்பில் எப்போதும் கேட்கப்படாது. இபிஎஃப்ஓ ​​எந்தவொரு சேவைக்கும் வாட்ஸ்அப், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் எந்த தொகையையும் டெபாசிட் செய்யுமாறு கேட்காது.’ என்று தெரிவித்துள்ளது.

ஃபிஷிங் ஆன்லைன் மோசடி

பொதுவாக, பிஎஃப் கணக்கில் மக்களின் பெரும் தொகை சேர்ந்திருக்கும். இதை மக்கள் ஓய்வுபெற்ற பிறகான செலவுகளுக்காக சேமித்து வைக்கின்றனர். இங்கு ஒரே இடத்தில் பெரிய தொகையைப் பெற முடியும் என்பதை மோசடி செய்பவர்கள் நன்கு அறிவார்கள். எனவே அவர்கள் ஃபிஷிங் தாக்குதல் மூலம் இந்த கணக்குகளை குறி வைக்கிறார்கள். 

ஃபிஷிங் என்பது ஆன்லைன் மோசடியின் ஒரு பகுதியாகும். அதில் டெபாசிட் செய்பவர் ஏமாற்றப்பட்டு, அவர்களிடமிருந்து கணக்கு தொடர்பான தேவையான தகவல்கள் பெறப்பட்டு, கணக்கில் உள்ள தொகை முற்றிலும் எடுக்கப்படும். 

இந்த தகவலை ஒருபோதும் பகிர வேண்டாம்

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், பான் எண், ஆதார் எண், யுஏஎன் மற்றும் உங்கள் பிஎஃப் கணக்கு எண் ஆகியவற்றை பகிரக்கூடாது. இந்த முக்கிய தகவல்கள் கசிந்தால், உங்கள் கணக்கில் உள்ள பணம் முற்றிலும் காலியாகிவிடும். பொதுவாக, ஒரு வேலையை விட்டுவிட்டு வேறு இடத்தில் சேர்பவர்களிடம் இதுபோன்ற மோசடிகள் அடிக்கடி காணப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், ஏதாவது ஃபோன் கால் அல்லது மெசேஜ் மூலம் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்பட்டால், உடனடியாக அது குறித்து காவல்துறையில் புகார் பதிவு செய்ய வேண்டும்.

மேலும் படிக்க | ஆன்லைனில் PF கணக்கின் இருப்பை சரிபார்ப்பது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News