IRCTC Retiring Room: 100 ரூபாயில் தங்கும் வசதி... புக்கிங் செய்யும் எளிய முறை விபரம்

IRCTC Retiring Room: ரயில் நிலையத்திலேயே பயணிகள் தங்குவதற்கான வசதியை ரயில்வே வழங்குகிறது. இந்திய ரயில்வேயின் பல நிலையங்களில் இந்த வசதி உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 23, 2024, 03:43 PM IST
  • ரயில் நிலையத்திலேயே பயணிகள் தங்குவதற்கான வசதியை ரயில்வே வழங்குகிறது.
  • IRCTC அறைகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.
  • இந்திய ரயில்வேயின் பல நிலையங்களில் தங்குவதற்கான வசதி உள்ளது.
IRCTC Retiring Room: 100 ரூபாயில் தங்கும் வசதி... புக்கிங் செய்யும் எளிய முறை விபரம் title=

IRCTC Retiring Room: இந்திய ரயில்வே உலகின் மிகப் பெரிய போக்குவரத்து நெட்வொர்க்குகளில் அடங்கியுள்ளது. தினம் கோடிக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே பல்கவேறு வசதிகளை வழங்குகிறது. அதில் ஒன்று தங்கும் வசதி. பல சமயங்களில், ரயில் பயணிகள், ஸ்டேஷனுக்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்குவதற்காக பார்க்கும் போது, அதற்கான கட்டணம் மிக அதிகமாக இருக்கும்.  பட்ஜெட்டில் நல்ல அறையைப் பெறுவது முடியாத காரியமாகவே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், ரயில்வே வழங்கும்  வசதியை நீங்கள் முயற்சி செய்யலாம். 

ரயில் நிலையத்திலேயே பயணிகள் தங்குவதற்கான வசதியை ரயில்வே வழங்குகிறது. இந்திய ரயில்வேயின் பல நிலையங்களில் இந்த வசதி உள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பட்டியலில் அது குறித்த தகவல்களைப் பார்க்கலாம். ஹோட்டல் போன்ற வசதியான அறையை நீங்கள் பெறலாம். வாடகையும் மிகக் குறைவு இரயில்வேயின் இந்த வசதி பற்றி வெகு சிலருக்கே தெரியும். 

பெரும்பாலான மக்கள் ஸ்டேஷனைச் சுற்றியுள்ள ஹோட்டல்களை தேர்ந்தெடுப்பதை விட, இதனை தேர்ந்தெடுக்காலம். ஸ்டேஷனிலேயே குறைந்த வாடகையில் அறை எடுக்கலாம். அதுவும் நல்ல வசதிகள் கொண்டது. இந்த அறைகளில் இருக்கும் வசதிகள் ஹோட்டல்களைப் போலவே இருக்கின்றன, வாடகையும் மிகக் குறைவு. நிலையத்திலேயே கிடைக்கும் IRCTC அறைகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | ரயில்வேயின் விகல்ப் திட்டம்... வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் கன்பர்ம் டிக்கெட் பெறலாம்

கட்டணம் ரூ.100 முதல் ரூ.700 வரை

IRCTC வழங்கும் இந்த ரிடயரிங் ரூம் வசதி முற்றிலும் ஏசி  ஹோட்டல் அறைகளைப் போலவே, தேவையான அனைத்தையும் கொண்டிருக்கும். இரவு தங்குவதற்கு இந்த அறைகளின் வாடகை ரூ.100 முதல் ரூ.700 வரை என்ற அளவில் உள்ளது. இந்த அறைகளை முன்பதிவு செய்வதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.

1. முதலில் நீங்கள் IRCTC கணக்கில் லாக் இன் செய்ய வேண்டும்.

2. இந்த உள்நுழைவுக்குப் பிறகு My Booking விருப்பத்திற்குச் செல்லவும்.

3. டிக்கெட் முன்பதிவுக்கு கீழே 'Retiring Room' என்ற விருப்பத்தைக் காண்பீர்கள்.

4. இங்கே கிளிக் செய்த பிறகு அறையை முன்பதிவு செய்வதற்கான விருப்பம் கிடைக்கும்.

5. இங்கு உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் பயணம் தொடர்பான தகவல்களையும் உள்ளிட வேண்டும்.

6. இங்கு பணம் செலுத்திய பிறகு உங்கள் அறை முன்பதிவு செய்யப்படும்.

ரிடயரிங் அறை வசதி என்பது இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் கிடைக்கும் தங்கு வசதி ஆகும், அவை ஏசி மற்றும் ஏசி அல்லாத என இரு வகை வசதிகளும் கிடைக்கும். ஒற்றை, இரட்டை மற்றும் டார்மெட்ரி வகைகளில் கிடைக்கின்றன. ஒரு பயணிக்கு, ஒரு ஒற்றை படுக்கையறை அல்லது ஒரு இரட்டை படுக்கை அறை அல்லது டார்மெட்ரி வகை அறையில் ஒரு படுக்கையை ஒதுக்கலாம். இரண்டு பயணிகளுக்கு, ஒரு இரட்டை படுக்கை அறை அல்லது டார்மெட்ரி வகை அறையில் இரண்டு படுக்கைகள் ஒதுக்கப்படலாம்.

மேலும் படிக்க | IRCTC Super App: டிக்கெட் முன்பதிவு முதல் உணவு ஆர்டர் வரை... All-in-One செயலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News