Chennai Tanjore Flight Service: சிறு நகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் சென்னை இடையே விமான சேவை மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. 1990ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தஞ்சை - சென்னை விமான சேவை பின்னர் பயணிகள் வருகையின்றி நிறுத்தப்பட்ட, நிலையில், அடுத்த மாதம் தஞ்சையில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்படுகிறது. இந்த விமான சேவை மூலம் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன் பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கை ஒன்றை வெளியிட்டது. அதன் கீழ், குறைந்த கட்டணத்தில் ஏழை, எளிய மக்களும் விமான பயணம் மேற்கொள்ள, விமான போக்குவரத்து இணைப்பு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்னை, பெங்களூருக்குப் பயணிகள் விமான சேவை அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று ஹரியாணா மாநிலம் குர்கானில் இயங்கி வரும் ஏர் டாக்ஸி நிறுவனம் அறிவித்துள்ளது. சிறுநகரங்களை இணைக்கும் உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து முதற்கட்டமாக 20 இருக்கைகளுடன் விமான சேவை தொடங்கப்படுகிறது. ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் உள்ளன என கூறப்படுகிறது.
உடான் திட்டத்தில் தாஞ்சாவூரைப் போன்று, நெய்வேலியில் இருந்தும் சென்னைக்கு சிறுரக விமானம் சேவையும் அடுத்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. உதான் திட்டத்தில் வேலூரில் ரூ.65 கோடியில் சிறிய விமான நிலையம் கட்டப்பட்டு தயாராக உள்ளது. என்எல்சியில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து பணிபுரியும் நூற்றுக்கணக்கானோர், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நெய்வேலியில் விமான நிலையத்தில் ஓடுபாதை உட்பட அனைத்து அம்சங்களும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிவில் போக்குவரத்து விமான இயக்குநரகத்தின் அனுமதிக்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கோடீஸ்வரனாகும் எளிய வழி... ‘இந்த’ 5 விதிகளை கடைபிடிக்கவும்...!
முக்கிய நகரங்களில் ஏர்டாக்ஸி சேவை
முக்கிய நகரங்களை இணைக்கும் ஏர்டாக்ஸி சேவையை போல, நகரங்களுக்குள் கூட்ட நேரிசலில் பயணிக்கும் நபர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் செய்தியாக, சிறிய தொலைவுகளுக்கான ஏர்டாக்ஸி சேவை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இண்டிகோவின் தாய் நிறுவனமான இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் (InterGlobe Enterprises) 2026 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் இ-ஏர் டாக்சி சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இண்டர்குளோப் எண்டர்பிரைசஸ் அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்ச்சர் ஏவியேஷன்' (Archer Aviation) நிறுவனத்துடன் இணைந்து இந்தச் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இ-ஏர் டாக்ஸியின் சிறப்புகளை கருத்தில் கொண்டு இதற்கு பெரிய வரவேற்பு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக 60 முதல் 90 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும் கார் பயணம், ஏர் டாக்ஸியில் சுமார் 7 நிமிடங்கள் ஆகும் என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் முழு மின்சார விமான டாக்ஸி சேவையைத் தொடங்குவதற்கும் இயக்குவதற்கும் இரு நிறுவனங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. எனினும், இதற்கான ஒழுங்குமுறை ஒப்புதல் இன்னும் பெறப்படவில்லை.
மேலும் படிக்க | வாங்கின தேதியில் இருந்து வாரண்டி கிடையாதாம்...பதறாதீங்க... முதல்ல இதை படிங்க..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ