சொத்தை விற்க திட்டமிட்டுள்ளீர்களா? தெரிந்துக் கொள்ள வேண்டிய விலை பணவீக்க குறியீடு அப்டேட்!

CII Index And Captial Gain: மூலதன ஆதாயம் பெறுபவர்கள் கட்டும் வரி அதிகரித்துவிட்டதா? வருமான வரித்துறை அறிவித்த விலை பணவீக்க குறியீட்டினால் லாபமா ஆதாயமா? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 26, 2024, 11:11 AM IST
  • சிஐஐ இண்டெக்ஸ் என்றால் என்ன?
  • மூலதன ஆதாய வரி
  • மூலதன ஆதயம் என்றால் என்ன?
சொத்தை விற்க திட்டமிட்டுள்ளீர்களா? தெரிந்துக் கொள்ள வேண்டிய விலை பணவீக்க குறியீடு அப்டேட்! title=

வருமான வரித்துறை விலை பணவீக்க குறியீட்டை வெளியிட்டுள்ளது, ஐடிஆர் தாக்கல் செய்பவர்கள் அது என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம். CBDT வெளியிட்டுள்ள இந்த குறியீட்டின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்வது அவசியம். ஏனெனில் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பலருக்கு கவலையைக் கொடுத்தாலும், சிலருக்கு நன்மையைக் கொடுக்கும். அது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கிறதா?

CBDT வெளியிட்டுள்ள விலை பணவீக்கக் குறியீடு அறிவிப்பு மூலதன ஆதாயம் அல்லது நஷ்டத்தை அறிந்துக் கொள்ள உதவும்.

பொருட்களின் தேய்மானம் 
பல பொருட்களின் விலை வாங்கும்போது இருப்பதைவிட விற்கும்போது தேய்மானம் கழிக்கப்பட்டு குறைந்த விலைக்கு விற்கப்படும். இதற்கு உதாரணமாக கார் உட்பட வாகனங்களைச் சொல்லலாம். வாங்கும்போது இருக்கும் விலை, விற்கும்போது குறைந்துவிடும்.

விலை உயரும் பொருட்கள்
சில பொருட்கள், வாங்கியதைவிட நாளுக்கு நாள் விலை அதிகரிக்கும். இதற்கு உதாரணமாக வீடு, மனை போன்றவற்றைச் சொல்லலாம். இப்படி வாங்கும் விலையை விட அதிக விலைக்கு விற்பது, உரிமையாளருக்கு லாபத்தைக் கொடுக்கும். பழைய பொருட்களை விற்பனை செய்வதில் கிடைக்கும் லாபத்திற்கும் அரசு வரி விதிக்கிறது. 

மேலும் படிக்க | செய்யும் எல்லா செலவுக்கும் கேஷ்பேக் வேண்டுமா? சிம்பிள் டெக்னிக் இதுதான்

மூலதன ஆதாய வரி
நிலம், பங்குகள் மற்றும் நகைகள் என வாங்கிய விலையை விட அதிக விலைக்கு அவற்றை விற்பதன் மூலம் கிடைக்கும் நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. 

மூலதன ஆதாய வரி கணக்கீடு
செலவு பணவீக்க குறியீடு என்பது, மூலதன ஆதாய வரியை கணக்கிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடாகும். இந்த குறியீட்டை, வருமான வரித்துறை வெளியிடும். ஏப்ரல் 2024 முதல் தொடங்கிய புதிய நிதியாண்டிற்கான செலவு பணவீக்கக் குறியீடு வருமான வரித் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலதன ஆதாயத்தை எவ்வாறு கணக்கிடுவது?
நீங்கள் வாங்கிய பொருளின் விலைக்கும், அதனை தற்போது விற்கும் விலைக்கும் இடையிலான வித்தியாசம் மூலதன ஆதாயம் ஆகும். ஆனால், பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு தான் மூலதன ஆதாயத்தை முடிவு செய்ய உதவுகிறது. பணவீக்கம் என்பது அவ்வப்போது மாறுபடு என்பதால், மூலதன ஆதாய வரியை கணக்கிடுவதற்கு, வருமான வரித்துறை அறிவிக்கும் விலை பணவீக்க குறியீடு (Cost Inflation Index) உதவுகிறது.

இந்த குறியீடு, விலைகள் எவ்வளவு அதிகரித்துள்ளன என்பதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டிற்கான சிஐஐ குறியீடு 363 ஆகும். இதற்கு முன்னதாக, 2023-24 ஆம் ஆண்டிற்கான சிஐஐ குறியீடு 348 என்றும், 2022-23ல் 331 என்ற அளவிலும் இருந்தது. பொருட்களின் விலைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், நம்மிடம் உள்ள பொருட்களை விற்பதில் கிடைக்கும் லாபத்ற்கு வரி விதிக்க வருமான வரித்துறை CII குறியீட்டைப் பயன்படுத்துகிறது.

மேலும் படிக்க | குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தால் என்ன ஆகும்? உலகை அச்சுறுத்தும் பிரம்மாண்ட பிரச்சனைகள்!

சிஐஐ குறியீடு விளக்கம்
உதாரணம் ஒன்றின் மூலம் இதனை எளிமையாக புரிந்துக் கொள்வோம். 30 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வாங்கிய நிலத்தை இன்று விற்கும்போது அதன் விலையில் மாறுபாடுகள் இருக்கும். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பத்து லட்சம் ரூபாய்க்கு நிலத்தை வாங்கியதாக வைத்துக் கொள்வோம். இன்று அந்த இடத்தின் விலை நிச்சயமாக அதிகரித்திருக்கும்.

பணவீக்கம் காரணமாக பணத்தின் மதிப்பு குறைவதால் ஏற்படும் மாறுதல் மட்டுமல்ல, காலப்போக்கில் அந்த நிலத்தின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் அதன் விலை அதிகரித்திருக்கும். பணவீக்கம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.எனவே, 30 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய நிலத்தை இன்று அதிக விலைக்கு விற்போம். 

பணவீக்கத்தினால் அதிகரித்த விலைக்கும், இன்று உங்கள் நிலத்திற்கு கிடைக்கும் பணத்தினால் உங்களுக்கு கிடைக்கும் லாபத்திற்குமான வித்தியாசத்தை நிர்ணயிக்க  சிஐஐ உதவுகிறது. இது உங்கள் பழைய பொருட்களின் மதிப்பை இன்றைய விலைக்கு ஏற்ப சரிசெய்கிறது. உங்கள் உண்மையான லாபம் என்ன என்பதை வரி செலுத்துபவர்கள் கணக்கிட்டு, அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும்.

முப்பது வருடங்களுக்கு முன் 10 லட்ச ரூபாய்க்கு நீங்கள் வாங்கிய நிலத்தை தற்போது 20 லட்சம் ரூபாய்க்கு விற்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். CII, 363ஐப் பயன்படுத்தி உங்கள் மூலதன ஆதாயத்தை எப்படி கணக்கிடுவது என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மூலதன ஆதாயத்தை கணக்கிடுவது எப்படி?

மூலதன ஆதாயம்= விற்பனை விலை – (வாங்கிய அசல் விலை) x (CII/100)) 

உங்கள் தனிப்பட்ட வருமான வரி கணக்கீடுகளைப் பொறுத்து நீங்கள் செலுத்த வேண்டிய வரித்தொகையில் மாறுதல்கள் இருக்கும்.  

மேலும் படிக்க | காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் விலை 50% உயர்வால் விற்பனையில் சரிவு! அதிர்ச்சியில் நெசவாளர்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News