Budget 2024: ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வருடாந்திர திட்டங்களில் வரி விலக்கு?

Budget 2024: பல துறைகளை சேர்ந்த பலதரப்பட்ட மக்களுக்கும் பட்ஜெட் தொடர்பாக பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைவரும் நிதி அமைச்சர் தங்களுக்கான ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 23, 2024, 10:34 AM IST
  • பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள்.
  • ஓய்வூதியம் மற்றும் வருடாந்திர திட்டங்களுக்கான மாற்றங்கள்.
  • பழைய மற்றும் புதிய வரி முறையின் கீழ் ஆயுள் கால காப்பீட்டிற்கு தனி விலக்கு.
Budget 2024: ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வருடாந்திர திட்டங்களில் வரி விலக்கு? title=

Budget 2024: 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1, 2024 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) தாக்கல் செய்யவுள்ளார். இந்த ஆண்டு பொதுத்தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இந்த பட்ஜெட் ஒரு இடைக்கால பட்ஜெட்டாக (Interim Budget) இருக்கும். தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமைந்த பிறகு ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இடைக்கால பட்ஜெட்டாக இருப்பதால் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் (Budget 2024 Expectations)

பல துறைகளை சேர்ந்த பலதரப்பட்ட மக்களுக்கும் பட்ஜெட் தொடர்பாக பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைவரும் நிதி அமைச்சர் தங்களுக்கான ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். வரி விதிகளை எளிமையாக்குவதிலும், ஆன்னுவிட்டி அதாவது வருடாந்திர திட்டங்களிலிருந்து அவற்றை நீக்குவதிலும், அதிகமான மக்களை இதில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். ஓய்வூதியம் (Pension) மற்றும் வருடாந்திர திட்டங்களில் (Annuity) முதலீடு செய்வது ஓய்வுக்குப் பிறகான வருமானத்திற்கு முக்கியமானது.

ஓய்வூதியம் மற்றும் வருடாந்திர திட்டங்களுக்கான மாற்றங்கள்

பிரிவு 80CCD(1B) இன் கீழ் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான (National Pension Scheme) தற்போதைய 50,000 ரூபாய் வரி விலக்கு வரம்பை, காப்பீட்டு நிறுவனங்களின் ஓய்வூதியம் மற்றும் வருடாந்திரத் திட்டங்களுக்கு நீட்டிப்பது குறித்து அரசாங்கத்திடம் பரிசீலனைகள் அனுப்பப்பட்டுள்ளன. இது முதலீடுகளை அதிகரிக்க உதவும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

கூடுதலாக, ஓய்வூதியம் மற்றும் வருடாந்திரத் திட்டங்களின் பூஜ்ஜிய மதிப்பீட்டைக் கருத்தில் கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, கூறப்பட்ட திட்டங்களுக்கு 0% ஜிஎஸ்டி விகிதத்தை நிர்ணயித்தல். இது ஓய்வூதியம் பெறும் மக்களின் வரிச்சுமையைக் குறைக்கவும், மேலும் அதிக குடிமக்களுக்கு நிதிப் பாதுகாப்பை அதிகரிக்கவும் உதவும். 

பிரிவு 80CCD(1B) இன் கீழ் NPS -க்கான தற்போதைய ரூ. 50,000 வரி விலக்கு (Tax Exemption) ஓய்வூதியம் மற்றும் வருடாந்திரத் திட்டங்களுக்கும் பொருந்த வேண்டும் என்றும் இதனால் அதிக மக்கள் இதில் சேர ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

மேலும் படிக்க | மத்திய அரசின் சூப்பர்ஹிட் திட்டம்.. டபுள் வருமானம் பெறலாம், உடனே படிக்கவும்

பழைய மற்றும் புதிய வரி முறையின் கீழ் ஆயுள் கால காப்பீட்டிற்கு தனி விலக்கு

"பழைய வரி முறையின் (Old Tax Regime) கீழ் ஆயுள் கால காப்பீட்டிற்கு தனி வரி விலக்கு வரம்பை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு நாங்கள் அரசாங்கத்திற்கு முன்மொழிகிறோம். தற்போதைய பிரிவு 80C ஆனது PPF, சுகன்யா சம்ரித்தி திட்டம் (SSY), ELSS போன்ற பிற வரி சேமிப்பு திட்டங்களையும் உள்ளடக்கியது. கூடுதலாக, அங்கு புதிய வரி முறையின் கீழ் ஆயுள் கால காப்பீட்டுக்கான விலக்கு கொடுப்பனவாகவும் இருக்க வேண்டும். இது ஆயுள் காப்பீட்டை நிதி ரீதியாக ஈர்க்கும் மற்றும் பொறுப்பான நிதி நடத்தைகளை கடைப்பிடிக்க வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும். மேலும் இது நிச்சயமற்ற காலங்களில் குடும்பங்கள் நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும்" என்று நிதி ஆலோசகர் பிரசாந்த் திரிபாதி கூறினார்.

“கடந்த 5 முதல் 6 ஆண்டுகளாக ஆயுள் காப்பீட்டுக்கு தனி வரி விலக்கு வரம்பை அறிமுகப்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. காரணம், தற்போதைய பிரிவு 80 சி மிகவும் குழப்பமான ஒரு நிலையில் உள்ளது. இதில் ஒருவர் பிபிஎஃப், சுகன்யா சம்ரித்தி திட்டம், இஎல்எஸ்எஸ், வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகை, பள்ளிக் கட்டணம், வீட்டுக் கடனின் அசல் தொகை, ஆயுள் காப்பீடு உட்பட ₹1.5 லட்சம் வரை விலக்கு கோரலாம். ," என்று ஏஜியாஸ் ஃபெடரல் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் எம்டி & சிஇஓ விக்னேஷ் ஷஹானே கூறினார்

ஆயுஷ்மான் பாரத்

நீங்களும் மத்திய அரசின் (Central Government) லட்சிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் பயனாளியாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிப்ரவரி 1-ம் தேதி அரசு தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் (Ayushman Bharat) பல கோடி பயனாளிகளுக்கு நல்ல செய்தி வழங்கப்படலாம். 'ஆயுஷ்மான் பாரத் யோஜனா' திட்டத்தின் கீழ் அரசாங்கம் வழங்கும் கவரேஜை அதிகரிக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது, ​​இத்திட்டத்தின் கீழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு (Medical Insurance) வழங்கப்படுகிறது. தற்போதுள்ள காப்பீட்டுத் தொகையை 50% வரை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பார்ட்! ரூ.8000 வரை அதிகரிக்கும் சம்பளம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News