Post Office RD vs FD: உங்கள் வருமானத்தின் சில பகுதிகளை சேமிக்கவோ அல்லது முதலீடு செய்யவோ நீங்கள் பழகிக்கொண்டால் எதிர்காலத்தில் பெரும் நிதி சிக்கல் என்றும் எதுவும் வராது. அந்த வகையில், நீங்கள் முதலீடு செய்ய திட்டமிட்டால், தபால் அலுவலகத்தில் பல வகையான முதலீட்டு திட்டங்கள் உள்ளன.
தபால் அலுவலகத்தின் Recurring Deposit (RD) மற்றும் Fixed Deposit (FD) பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம். இந்த இரண்டு திட்டங்களை நீங்கள் பொதுத்துறை / தனியார் வங்கிகளிலும் பெறலாம். இருப்பினும், தபால் அலுவலகத்தில் உள்ள இந்த RD மற்றும் FD இரண்டிலும் நல்ல வட்டியைப் பெறுவீர்கள்.
தற்போது நீங்கள் தபால் அலுவலக RD திட்டத்தில் 6.7 சதவீத வட்டியைப் பெறுகிறீர்கள். RD திட்டத்தின் நன்மை என்னவென்றால், நீங்கள் ஒரு பெரிய தொகையை மொத்தமாக முதலீடு செய்ய முடியாவிட்டால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை தபால் அலுவலக RD விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யலாம்.
அஞ்சல் அலுவலக RD 5 ஆண்டுகள் ஆகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 6.7 சதவீத வட்டியில் லாபம் சம்பாதிக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு மொத்த தொகையை டெபாசிட் செய்தால், தபால் அலுவலக FD உங்களுக்கு லாபகரமான ஒப்பந்தமாக இருக்கும். இதில், 1 வருட முதலீட்டில் கூட RD திட்டத்தின் 5 வருட பலன்கள் இதில் வட்டியாக கிடைக்கும். அதாவது, 1 வருட முதலிட்டில் வரும் லாபம், 5 வருட RD திட்டத்தில் கூட கிடைக்காது. ஓராண்டு திட்டம், 2 ஆண்டுகள் திட்டம், 3 ஆண்டுகள் திட்டம் மற்றும் 5 ஆண்டுகள் திட்டம் எனப தபால் அலுவலக FD திட்டத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், அதில் எவ்வளவு பலன்கள் கிடைக்கும் என்பதை இதில் காணலாம்.
மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2024... பலருக்கு தெரியாத சில சுவாரஸ்யமான விஷயங்கள்!
1 வருட தபால் அலுவலக FD: நீங்கள் ஒரு வருடத்திற்கு தபால் அலுவலக FD திட்டத்தில் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால், உங்களுக்கு 6.9 என்ற விகிதத்தில் வட்டி வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், ஒரு வருடத்திற்குப் பிறகு, நீங்கள் 1 லட்சம் ரூபாய்க்கு, 7 ஆயிரத்து 081 ரூபாயை வட்டியாகப் பெறுவீர்கள். மேலும் ஒரு வருடத்திற்குப் பிறகு மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 81 ரூபாயை திரும்பப் பெறலாம்.
2 வருட தபால் அலுவலக FD: 2 ஆண்டுகளுக்கு தபால் அலுவலகத்தில் 1 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால், உங்களுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு வட்டியாக 14 ஆயிரத்து 888 ரூபாய் கிடைக்கும். அதாவது, மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 888 ரூபாயை திரும்பப் பெறுவீர்கள்.
3 வருட தபால் அலுவலக FD: தபால் அலுவலகத்தில் 3 வருடத்திற்கு 1 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால், 7.1 சதவிகிதம் வட்டி கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், 7.1 சதவீத வட்டி விகிதத்தில் 23 ஆயிரத்து 508 ரூபாயை வட்டியாக பெறுவீர்கள். அதன்மூலம், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் மொத்தமாக 1 லடசத்து 23 ஆயிரத்து 508 ரூபாயை திரும்பப் பெறலாம்.
5 வருட தபால் அலுவலக FD: நீங்கள் 5 ஆண்டுகளுக்கு தபால் அலுவலகத்தில் 1 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால், உங்களுக்கு 7.5 சதவிகிதம் வட்டி கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், 5 ஆண்டுகளில் முதலீட்டில் 44 ஆயிரத்து 995 ரூபாய் வட்டியாக கிடைக்கும். இதன்மூலம், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 995 ரூபாய் கிடைக்கும்.
மேலும் படிக்க | Income Tax: ‘இந்த’ தவறுகளை செஞ்சுடாதீங்க... அபராதம் செலுத்த வேண்டி வரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ