LPG Cylinder விலை குறைகிறதா? உங்க ஊர்ல என்ன ரேட்? புதிய அப்டேட் இதோ

LPG Gas Cylinder Price: ஜூன் மாதம் முடிந்து நாளை முதல் ஜூலை மாதம் துவங்க உள்ளது. ஒவ்வொரு புதிய மாதமும் அரசாங்கத்தால் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. இது நமது பாக்கெட்டை நேரடியாக பாதிக்கிறது, எனவே ஜூலை 1 முதல் சமையல் கேஸ் விலை குறையுமா அல்லது உயருமா என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 30, 2023, 10:21 AM IST
  • எல்பிஜி கேஸ் விலை (ரூ./19 கிலோ சிலிண்டர்).
  • எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • ஜனவரி 1ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.1769ஐ எட்டியது.
LPG Cylinder விலை குறைகிறதா? உங்க ஊர்ல என்ன ரேட்? புதிய அப்டேட் இதோ title=

எல்பிஜி சிலிண்டர்: இன்றுடன் ஜுன் மாதம் முடிந்து, நாளை ஜூலை துவங்க உள்ள நிலையில், மக்களுடன் தொடர்புடைய சில நேரடி விஷயங்களில், அதிரடி மாற்றங்கள், நம் நாட்டில் நிகழ போவதாக தெரிகிறது. அந்த வகையில் நாளை முதல், 4 முக்கியமான விஷயங்களை பொதுமக்கள் எதிர்நோக்கி உள்ளனர். இதில் முக்கியமானது, சமையல் கேஸ் விலை ஆகும். எல்பிஜி விகிதத்தில் மாற்றம், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மாதந்தோறும் விலையை மாற்றி வருகின்றனத். கடந்த மாதங்களில் இந்த மாற்றங்களின் விகிதத்தில் குறைவு காணப்பட்டது, இந்த முறையும் வணிக ரீதியாக குறைவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது. அந்தவகையில் இம்முறை 14 கிலோ எல்பிஜி சிலிண்டர் விகிதமும் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் ஜூன் மாதம் வர்த்தக எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையில் பெரும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், எல்பிஜி கேஸ் விலையில் தொடர்ந்து எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே, எண்ணெய் நிறுவனம், இது தொடர்பாக விலைஉயர்வு குறித்த முடிவை எடுக்கலாம் என்கிறார்கள்.

மேலும் படிக்க | விரைவில் வருகிறது 8th Pay Commission: 44% ஊதிய உயர்வு... மகிழ்ச்சியில் காத்திருக்கும் ஊழியர்கள்

எனவே எல்பிஜி சிலிண்டர் விலைகள் ஜூலை 1, 2023 அன்று அப்டேட் செய்யப்படும். கடந்த மூன்று மாதங்களாக வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், டெல்லியில் வர்த்தக சிலிண்டர் ரூ.2119.50ல் இருந்து ரூ.1773 ஆக குறைந்துள்ளது. அதாவது, வணிக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு ரூ.346.50 நிவாரணம் கிடைத்த நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

கடந்த ஆறு மாதங்களில், வர்த்தக சிலிண்டர்களின் விலை இருமுறை அதிகரித்து, மூன்று முறை குறைந்துள்ளது. ஒருமுறை எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் 1, 2022 அன்று, டெல்லியில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.1744 ஆக இருந்தது. ஜனவரி 1ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.1769ஐ எட்டியது.

பிப்ரவரியில் அதில் எந்த மாற்றமும் இல்லை, மார்ச் 1ம் தேதி ரூ.350.50 அதிகரித்து ரூ.2119.50ஐ எட்டியது. ஏப்ரல் 1, 2023 அன்று, வணிக சிலிண்டர் விலை ரூ.91.50 முதல் ரூ.2028 வரை குறைந்துள்ளது. அதன் விலையும் மே 1ம் தேதி குறைக்கப்பட்டு ரூ.1856.50 ஆக இருந்தது. இதையடுத்து, ஜூன் 1ம் தேதியும், 19 கிலோ எடை கொண்ட இந்த நீல நிற சிலிண்டர் விலை குறைந்து, ரூ.1773க்கு வந்தது.

எல்பிஜி கேஸ் விலை (ரூ./19 கிலோ சிலிண்டர்)

சென்னை - மாதம்

1 ஜூன் 2023 - 1937.00

1 மே 2023 - 2021.50

1 ஏப்ரல் 2023 - 2192.50

1 மார்ச் 2023 - 2268.00

1 பிப்ரவரி 2023 - 1917.00

1 ஜனவரி 2023 - 1917.00

1 டிசம்பர் 2022 - 1891.50

1 நவம்பர் 2022 - 1893.00

1 அக்டோபர் 2022 - 2009.50

1 செப்டம்பர் 2022 - 2045.00

1 ஆகஸ்ட் - 2141.00

6 ஜூலை 2022 - 2177.50

1 ஜூலை 2022 - 2186.00

மறுபுறம், 14 கிலோ வீட்டு சிலிண்டரைப் பற்றி பேசுகையில், ஜூலை 6, 2022 க்குப் பிறகு, எவ்வித மாற்றமும் இன்று அதே விலையில் உள்ளது. பெட்ரோலிய நிறுவனங்கள் நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, வீட்டு உபயோக சிலிண்டர் விலையை ரூ.50 உயர்த்தி ரூ.1053ல் இருந்து ரூ.1103 ஆக உயர்த்தியுள்ளன.

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவரா? அக்டோபர் வரை கவலையில்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News