அட்டகாசமான அப்டேட்: EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், 1 கோடி கார்பசுடன் ஓய்வுபெறலாம், முழு விவரம் இதோ

EPFO Wage Ceiling Hike: அரசு ஊழியர்கள் UPS எனப்படும் யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டத்தின் (Universal Pension System) பலன்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 1, 2024, 03:02 PM IST
  • தனியார் துறை ஊழியரா நீங்கள்?
  • உங்களுக்கு மிக நல்ல செய்தி ஒன்று காத்துக்கொண்டு இருக்கின்றது.
  • EPFO ​​க்கான சம்பள வரம்பை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.
அட்டகாசமான அப்டேட்: EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம், 1 கோடி கார்பசுடன் ஓய்வுபெறலாம், முழு விவரம் இதோ title=

EPFO Wage Ceiling Hike: தனியார் துறை ஊழியரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு மிக நல்ல செய்தி ஒன்று காத்துக்கொண்டு இருக்கின்றது. நல்ல ஓய்வூதியத்துடன் பாதுகாப்பான வழியில் பணி ஓய்வுக்கு பிறகான நாட்களை கழிக்கும் எண்ணத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. லட்சக்கணக்கான தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்களை கணிசமாக உயர்த்தும் நடவடிக்கையாக, EPFO ​​க்கான சம்பள வரம்பை அதிகரிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. இது குறித்து இந்த பதிவில் காணலாம்.

EPF Members: இபிஎஃப் உறுப்பினர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் மாற்றம்

அரசு ஊழியர்கள் UPS எனப்படும் யுனிவர்சல் பென்ஷன் சிஸ்டத்தின் (Universal Pension System) பலன்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், இந்தத் திட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்கள் இதிலிருந்து விடுபட்டுள்ளனர். ஆனால், தற்போது இந்த ஏற்றத்தாழ்வை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிகிறது.

EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு இதனால் கிடைக்கவுள்ள நன்மைகள் என்ன?

- அதிக ஓய்வூதியம் (Higher Pension): 

இபிஎஃப் பங்களிப்புக்கான (EPF Contribution) சம்பள வரம்பு அதிகரிக்கப்பட்டால், பணியாளர்களின் இபிஎஃப் கணக்கில் (EPF Account) அதிக பணம் செலுத்தப்படும். இது ஓய்வுக்குப் பிறகு ஊழியர்கள் பெறக்கூடிய ஓய்வூதியத்தில் கணிசமான அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

- மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு (Enhanced Social Security): 

EPF பங்களிப்பு அதிகரிப்பதால், அதனால், தனியார் துறை ஊழியர்களுக்கு வலுவான சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பு ஏற்படுகின்றது.

நிதிப் பாதுகாப்பு (Financial Security): 

சம்பள வரம்பில் செய்யப்படும் மாற்றம், வயது மூப்பில் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து, கணிசமான ரிடயர்மெண்ட் கார்பஸை (Retirement Corpus) உருவாக்க உதவும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் 92% ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட் 2025 -இல் நல்ல செய்தி

Private Sector Employees: ஊதிய வரம்பு எவ்வளவு அதிகரிக்கும்?

தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் இது தொடர்பாக ஒரு முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. இதில் EPFO ​​க்கான சம்பள வரம்பை தற்போதைய ரூ.15,000 -இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

- இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டால், தனியார் துறை ஊழியர்கள் பெறும் ஓய்வூதிய பலன்களில் ஆக்கப்பூர்வமான தாக்கம் ஏற்படும். 

- இந்த உயர்வால், தனியார் துறை ஊழியர்கள் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். 

- ஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் மாதம் ரூ.10,050 வரை ஓய்வூதியம் பெறக்கூடும்.

- எனினும், இதன் காரணமாக்க, கையில் கிடைக்கும் சம்பளம் அதாவது டேக் ஹோம் சேலரி சிறிது குறையலாம். 

- ஆனால், இது ஊழியர்களின் எதிர்காலத்திற்கான ஒரு பயனுள்ள முதலீடாக இருக்கும்.

ஊழியர்களின் சம்பளத்தில் என்ன பாதிப்பு இருக்கும்?

சம்பள வரம்பு அதிகரிக்கப்பட்டால், ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் முன்பை விட அதிகமான பகுதி இபிஎஃப் தொகைக்கு (EPF Amount) அளிக்கப்படும். இது உங்கள் நிகர சம்பளத்தில் ஒரு சிறிய குறைப்புக்கு வழிவகுக்கும். இருப்பினும், இதனால் நீண்ட கால பலன்கள் அதிகமாக கிடைக்கும்.

தனியார் துறை ஊழியர்கள்

தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த மாற்றம் மில்லியன் கணக்கான தனியார் துறை ஊழியர்களுக்கு பாதுகாப்பான நிதி எதிர்காலத்தை உறுதி செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கும். EPFO சம்பள வரம்பை அதிகரிப்பதன் மூலம், அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்களது வேலைவாய்ப்புத் துறையைப் பொருட்படுத்தாமல் சமூகப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரிக்கிறது. இது குறித்த அரசாங்கத்தின் இறுதி முடிவுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள். எனினும், இது கண்டிப்பாக நடக்கும் என நம்பப்படுவதால், தனியார் துறை ஊழியர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறினால் அது மிகையாகாது. 

மேலும் படிக்க | தீபாவளிக்கு அடுத்த நாளே ஆப்பு... எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு - மக்கள் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News