தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது!!

Diwali Bonus: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அவர்களது தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 18, 2023, 01:13 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி.
  • தீபாவளி போனஸ் அறிவிப்பு வந்தது.
  • முழு தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
தீபாவளி போனஸ்!! மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி... அறிவிப்பு வெளியானது!! title=

தீபாவளி போனஸ்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி கிடைத்துள்ளது. அவர்களது தீபாவளி போனஸ் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. குரூப் சி, குரூப் டி மற்றும் குரூப் பி -யின் சில பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான தீபாவளி போனஸை செவ்வாய்க்கிழமை மோடி அரசு புதுப்பித்துள்ளது. நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை, அலுவலக குறிப்பில், குரூப் சி, டி மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த ஆண்டு போனஸ் கிடைக்கும் என்றும், இதற்கு சில சேவை நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும் குற்ப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளின் கீழ் போனஸ் பெறுவதற்கான அதிகபட்ச வரம்பு ரூ.7,000 மாத சம்பளமாக இருக்கும்.

மத்திய துணை ராணுவம் மற்றும் ஆயுதப்படைகளின் தகுதியான ஊழியர்களுக்கும் போனஸ் கிடைக்கும். தீபாவளிக்கு முன்னதாக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) / அகவிலை நிவாரணம் (DR) உயர்வை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

 

 

இந்த உத்தரவின்படி, மார்ச் 31, 2021 அன்று பணியில் இருந்த ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் 2020-21 நிதியாண்டில் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ந்து சேவை செய்தவர்கள் இந்த தற்காலிக போனஸுக்குத் தகுதி பெறுவார்கள்.

2022-23 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசு ஊழியர்களுக்கான உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட போனஸ் (அட்ஹாக் போனஸ்) கணக்கிடுவதற்கான உச்சவரம்பையும் 7,000 ரூபாயாக நிதி அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.

Big Diwali Bonus Announced For These Central Government Employees

Big Diwali Bonus Announced For These Central Government Employees

Big Diwali Bonus Announced For These Central Government Employees

Big Diwali Bonus Announced For These Central Government Employees

மேலும் படிக்க | 7th Pay Commission அதிரடி அப்டேட்: டிஏ ஹைக்... இன்று முக்கிய அமைச்சரவை கூட்டம், குஷியில் ஊழியர்கள்!!

முன்னதாக, இன்று நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள செலவினத் துறை, உற்பத்தித்திறன் சார்ந்த போனஸ் திட்டத்திற்குள் இல்லாத, குரூப் B -இல் உள்ள அனைத்து நான் கெசடட் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் குரூப் C மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2022-23 ஆம் ஆண்டிற்கான 30 நாள் ஊதியங்களுக்கு சமமான நான் ப்ரொடக்டிவிடி லிங்க்ட் போனஸ் (அட்ஹாக் போனஸ்) வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியது.

இந்த உத்தரவுகளின் கீழ் தற்காலிக போனஸ் வழங்கலுக்கான உச்சவரம்பு ரூ.7,000 மாத ஊதியமாக இருக்கும். இந்த அட்ஹாக் போனஸ் மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகளின் தகுதியான ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.

இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் தொடர்பான் அனல்ல செய்தியும் இன்று கிடைக்கும் என எதிர்பார்க்கபப்டுகின்றது. அகவிலைப்படி உயர்வு குறித்து புதன்கிழமை, அதாவது இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு அறிவிக்கும் எனத் தெரிகிறது. பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரவை இன்றைய தினம் கூடும் என்றும் அதில் அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்று முந்தைய தகவல்கள் தெரிவித்தன. ஆனால் சமீபத்திய அறிக்கைகள் டிஏ உயர்வு (DA Hike) 4 சதவீதம் இருக்கும் என்று கூறுகின்றன.

ஊழியர்களுடன் சேர்ந்து ஓய்வூதியதாரர்களுக்கும் பரிசுகள்

மத்திய அரசு ஊழியர்களைத் தவிர, ஓய்வூதியம் பெறுவோரும் அகவிலைப்படி உயர்வின் பலனைப் பெறுவார்கள். டிஏவைப் போலவே, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் டிஆர் அதே அளவில் அதிகரிக்கிறது. ஊழியர்களுக்கு அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கிறதோ அதே அளவு ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அப்டேட்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் வரும் லாபகரமான் மாற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News