சிறுசேமிப்பு திட்டங்களின் விதிகளில் மாற்றம்: சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா / செல்வமகள் சேமிப்பு திட்டம் (SSY), மகிளா சம்மான் யோஜனா மற்றும் தபால் அலுவலக திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்பவர்களுக்கான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது.
இப்போது இந்தத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் பான் மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். இந்த மாற்றம் ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. நீங்கள் இந்த அரசு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்திருந்து, உங்களிடம் பான் அல்லது ஆதார் அட்டை இல்லை என்றால், அவற்றை உடனடியாக பெறுவது நல்லது.
வெளிப்படைத் தன்மையை கொண்டு வர மாற்றம் செய்யப்பட்டது
பான் ஆதார் இல்லாவிட்டால், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட மாட்டீர்கள். இந்தத் திட்டங்களில் முதலீட்டை மிகவும் வெளிப்படையானதாகவும் எளிதாகவும் மாற்றும் நோக்கத்தில் இந்த மாற்றம் அரசாங்கத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், அரசு வெளியிடும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய ஆதார் மற்றும் பான் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆதார் எண் இல்லாமலும் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று விதி இருந்தது.
முதலீடு செய்ய பான் கார்டை காட்டுவது அவசியம்
முதலீட்டாளர்கள் எந்த வகையான முதலீடும் செய்வதற்கு முன் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், வரம்பைத் தாண்டி முதலீடு செய்ய, பான் கார்டைக் காட்ட வேண்டும். அரசாங்கத்தால் நடத்தப்படும் திட்டங்களில் முதலீட்டை மிகவும் வெளிப்படையானதாகவும் எளிதாகவும் செய்ய இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உங்களிடம் ஆதார் அட்டை இல்லையென்றால் கணக்கைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குள் ஆதார் எண்ணைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் முதலீடு செய்தால், நீங்கள் பான் கார்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி செய்தி... EMI இனி உயரும்
தேவைப்படும் ஆவணங்கள்
சிறு சேமிப்புத் திட்டக் கணக்கைத் திறக்க உங்களுக்கு இந்த ஆவணங்கள் தேவைப்படும்:
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
– ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு சீட்டு
– பான் எண்
- ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை 30 செப்டம்பர் 2023 -க்குள் சமர்ப்பிக்கவில்லை என்றால், அவர்களின் கணக்கு அக்டோபர் 1, 2023 முதல் தடை செய்யப்படும்.
கூடுதல் தகவல்
பெண்களுக்கான சேமிப்பு திட்டங்கள்: அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட பெண்களுக்கான அரசு திட்டங்களில், பெண்களுக்கு நல்ல வட்டி விகிதத்துடன் வரி விலக்கு பலன் அளிக்கப்படுகிறது. தேசிய சேமிப்பு மாதாந்திர வருமானத் திட்டம் (National Saving Monthly Income Scheme), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Saving Scheme), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மற்றும் மகிளா சம்மான் பச்சத் யோஜனா போன்ற பல திட்டங்கள் இதில் அடங்கும்.
நீங்கள் ஒரு தாயாகவும், உங்கள் மகளின் வயது 10 அல்லது அதற்கும் குறைவாகவும் இருந்தால், நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் மகளுக்கு 21 வயது முடியும் வரை அவரது பெயரில் ஆண்டுதோறும் முதலீடு செய்து அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக மாற்றலாம். இந்த திட்டத்தில், அதிக வட்டி விகிதத்துடன், பிரிவு 80C இன் கீழ் வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டங்கள்: வரி விலக்குடன் பல நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ