ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்; இனி இலவச கோதுமை கிடைக்காது

Free Ration Update: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 19, 2022, 02:32 PM IST
  • பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்
  • 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி வழங்கப்படுகிறது
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்; இனி இலவச கோதுமை கிடைக்காது title=

நீங்களும் ரேஷன் கார்டு பயனாளியாக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானதாகும். அதன்படி அரசாங்கத்தின் முடிவால் உங்களுக்கு பெரிய நெருக்கடி ஏற்படலாம். உண்மையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னா யோஜனா திட்டத்தின் கீழ், ஜூன் 19-30 வரை உத்தரப் பிரதேசத்தில் இலவச ரேஷன் விநியோகிக்கப்படும். ஆனால், இம்முறை பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி விநியோகிக்கப்படும். அதாவது, இந்த முறை உங்களுக்கு இலவச ரேஷனின் கீழ் கோதுமை கிடைக்காமல் போகும். இதுகுறித்து, உணவு மற்றும் தளவாடத் துறை ஆணையரும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

கோதுமைக்கு பதில் அரிசி கிடைக்கும்
உண்மையில், இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இதுவரை 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது உணவு மற்றும் தளவாடத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி, இந்த மாதம் முதல் ரேஷன் பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக 5 கிலோ அரிசி விநியோகிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு முதலில் உ.பியில் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது உ.பி.யுடன் சேர்த்து பல மாநிலங்கள் கோதுமைக்கான ஒதுக்கீட்டை குறைத்துள்ளது.

மேலும் படிக்க | பிரதமர் காப்பீட்டுத் திட்டம்; 7 ஆண்டுகளுக்கு பின் பிரீமியத்தில் மாற்றம்; ஜூன் 1 முதல் அமல் 

கோதுமை தட்டுப்பாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தற்போது பெரும்பாலான மாநிலத்தில் கோதுமை கொள்முதல் குறைந்ததால், ரேஷன் ஒதுக்கீட்டில் கோதுமையின் அளவைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முக்கிய முடிவு பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனாக்கு மட்டுமே திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இனி கோதுமைக்கு பதிலாக சுமார் 55 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் பெறுவது எப்படி?
அரசின் இந்த திட்டத்தின் பலனை நீங்களும் பெற்றால், போர்ட்டபிலிட்டி சலான் மூலம் அரிசியை எடுத்துச் செல்லலாம். இது தவிர, ஆதார் அங்கீகாரம் மூலம் உணவு தானியங்கள் எடுக்க முடியாத தகுதியுள்ள நபர்களுக்கு மொபைல் ஓடிபி சரிபார்ப்பு மூலம் ஜூன் 30ஆம் தேதி அரிசி விநியோகிக்கப்படும். மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்ட நோடல் அலுவலர்கள் விநியோகத்தின் போது வெளிப்படைத்தன்மைக்காக அனைத்து கடைகளிலும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Ration Card: முக்கிய விதி மாற்றம், அடுத்த மாதம் முதல் புதிய ரூல் அமல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News