40,000 ரூபாயில் ஐரோப்பிய பயணம்... ஏர் இந்தியா வழங்கும் அசத்தல் சலுகை!

Air India Tickets Offer: இந்தியாவில் இருந்து லண்டன் உட்பட மேலும் ஐந்து ஐரோப்பிய நகரங்களுக்கு ஒருவழிப் பயணத்திற்கான சிறப்பு சலுகைகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 13, 2023, 12:50 PM IST
  • இந்தியாவில் இருந்து லண்டன் (London) உட்பட மேலும் ஐந்து ஐரோப்பிய நகரங்களுக்கு ஒரு வழி விமானங்களில் கட்டண சலுகை.
  • ஐரோப்பாவிற்கு செல்ல திட்டமிட்டால், மிக குறைந்த கட்டணத்தில் டிக்கெட் கிடைக்கும்.
  • ஐரோப்பிய நகரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் 48 இடைநில்லா விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது.
40,000 ரூபாயில் ஐரோப்பிய பயணம்... ஏர் இந்தியா வழங்கும் அசத்தல் சலுகை! title=

Air India Tickets Sale: இன்றைய காலகட்டத்தில் விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் வாங்க வேண்டாம் என நினைப்பவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன...விடுமுறைக்காக ஊர் அல்லது நாட்டிற்கு வெளியே செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அத்தகைய சூழ்நிலையில், ஐயோப்பிய நாடுகளுக்கு வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஏர் இந்தியா மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. 

குறிப்பாக நீங்கள் ஐரோப்பாவிற்கு செல்ல திட்டமிட்டால், மிக குறைந்த கட்டணத்தில் டிக்கெட் கிடைக்கும். உண்மையில், இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா (Air India), இந்தியாவில் இருந்து லண்டன் (London) உட்பட மேலும் ஐந்து ஐரோப்பிய நகரங்களுக்கு ஒரு வழி விமானங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.25,000 முதலான கட்டணத்தில்  சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள லண்டன், டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன், இத்தாலியின் மிலன், பிரான்சின் பாரிஸ் மற்றும் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா ஆகிய இடங்களுக்கு ஏர் இந்தியா சிறந்த சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகையில், டிக்கெட்டுகள் உங்களுக்கு மிகவும் மலிவான விலையில் கிடைக்கும்.

விமான கட்டண விபரம்

ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பாவில் உள்ள இந்த நகரங்களுக்கு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.40,000 முதல் கட்டணத்தை வழங்குகிறது. இந்தியாவிலிருந்து ஐந்து ஐரோப்பிய இடங்களுக்குச் செல்லும் ஒரு வழி விமான பயணம் மற்றும் சுற்றுப் பயணங்களுக்கான எகானமி வகுப்பு முன்பதிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தும் என்று ஏர் இந்தியா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. புது டெல்லி மற்றும் மும்பையில் இருந்து இந்த ஐந்து ஐரோப்பிய நகரங்களுக்கு ஒவ்வொரு வாரமும் 48 இடைநில்லா விமானங்களை ஏர் இந்தியா இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா வெளியிட்டுள்ள தகவலில், குறிப்பிட்ட கால விற்பனையின் கட்டணமும் வெவ்வேறு நகரங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம். இருப்பினும், இந்த ஏர் இந்தியா சலுகை விற்பனையை 9Air India Tickets Sale) பயன்படுத்திக் கொள்ள உங்களுக்கு இன்னும் சிறிது காலம், மட்டுமே உள்ளது. ஏர் இந்தியாவின் இந்த விற்பனை அக்டோபர் 14, 2023 வரை திறந்திருக்கும். இந்த விற்பனையின் கீழ், நீங்கள் 15 டிசம்பர் 2023 வரை பயணத்திற்கு முன்பதிவு செய்யலாம். ஏர் இந்தியாவின் இந்த சலுகை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.airindia.com தளத்தில் விமான டிக்கெட்டை புக் செய்து பெறலாம் . இந்த சலுகை விற்பனையின் கீழ் டிக்கெட்டுகள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும் மற்றும் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன.

மேலும் படிக்க |  இண்டிகோ பயணிகள் கவனத்திற்கு... இனி குளிர்பானம் இலவசம்... ஆனால் ஒரு நிபந்தனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News