Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. தற்போது கூடுதல் ரேஷன் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், இனி 10 கிலோ ரேஷன் கூடுதலாக வழங்கப்படும் என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இலவச ரேஷன் வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், இப்போது உங்களுக்கு 10 கிலோ ரேஷன் கூடுதலாக கிடைக்கும். ரேஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதல் ரேஷன் வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவின் மூலம் 57 லட்சம் பேர் பலன் பெறுவார்கள்.
ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும்
ஜம்மு-காஷ்மீர் அரசு, பிரதம மந்திரி கூடுதல் தானிய திட்டத்தைத் (Prime Minister's Food Supplement Scheme) தொடங்கியது, இதன் கீழ் அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் மானிய விலையில் 10 கிலோ கூடுதல் ரேஷன் வழங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் படிக்க | Alert!! ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு.. உடனே இதை செய்யுங்கள்!
மக்களுக்கு மகிழ்ச்சி தரும் இந்த செய்தியை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்தார்.
4 கிலோ இலவச ரேஷன்
ஜம்மு காஷ்மீரில் அசிக்கும் குடும்பங்களில் ஒரு உறுப்பினருக்கு 4 கிலோ இலவச ரேஷன் வசதி வழங்கப்படுகிறது . இனிமேல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோவுக்கு 25 ரூபாய் என்ற விலையில் அதிகபட்சமாக 10 கிலோ கூடுதல் ரேஷன் வசதி வழங்கப்படும்.
ஜம்மு காஷ்மீரில் தற்போது 14.32 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர், மேலும் 57,24,000 பேர் PMFSS திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அரசுக்கு 1.80 கோடி ரூபாய் நிதிச்சுமை
மாநில அரசின் இந்த முடிவுக்கு சுமார் ரூ.1.80 கோடி செலவாகும். பொதுமக்களின் வசதிகளை கருத்தில் கொண்டு அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஏழைக் குடும்பங்களின் நிதிச் சுமையை நீக்கவும், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யவும் திருத்தப்பட்ட கட்டணங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறினார்.
மேலும் படிக்க | SBI Locker Rules: வங்கி லாக்கர் தொடர்பான விதிகளில் அதிரடி மாற்றங்கள்!
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கவும்
ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த காலக்கெடு ஜூன் 30 வரை இருந்தது, இப்போது அது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த்யோதயா பயனாளிகள், ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பது அத்தியாவசியமானது ஆகும். ரேஷன் அட்டையுடன், ஆதார் அட்டையை இணைக்கும் முழு செயல்முறையும் முற்றிலும் இலவசம். அதை இலவசமாகப் பெற, நீங்கள் அருகிலுள்ள அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ