டிசம்பர் 15: அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு... யார் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வேண்டும்?

Advance Tax: டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அட்வான்ஸ் டாக்சின் மூன்றாம் தவணையை செலுத்துவது கட்டாயமாகும். இது ஒரு வகையான வருமான வரியாகும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 13, 2024, 05:12 PM IST
  • அட்வான்ஸ் டேக்ஸ் என்றால் என்ன?
  • யார் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வேண்டும்?
  • அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு என்ன?
டிசம்பர் 15: அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு... யார் அட்வான்ஸ் டேக்ஸ் செலுத்த வேண்டும்? title=

Advance Tax: அட்வான்ஸ் வரியின் மூன்றாவது தவணை செலுத்தும் நேரம் நெருங்கிவிட்டது. டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அட்வான்ஸ் டாக்சின் மூன்றாம் தவணையை செலுத்துவது கட்டாயமாகும். இது ஒரு வகையான வருமான வரியாகும். இது நிதியாண்டு முடிவதற்குள் செலுத்தப்பட வேண்டும். 

இந்த வருமான வரியை நீங்கள் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் டெபாசிட் செய்யலாம். ஆன்லைனில் பணம் செலுத்த, நீங்கள் வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று இதை செலுத்துவதற்கான செயல்முறையை செய்ய வேண்டும். ஆஃப்லைன் பயன்முறையில் இதை செலுத்த, வங்கிக் கிளைக்குச் சென்று வரியைச் செலுத்தலாம். நீங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்தவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்வது அவசியமாகும்.

அட்வான்ஸ் டேக்ஸ் என்றால் என்ன?

வரித்தொகையை ஒட்டுமொத்தமாக கட்டுவதற்கு பதிலாக குறிப்பிட்ட தேதிகளின்படி தவணைகளில் செலுத்தும் வரித் தொகையே அட்வான்ஸ் டேக்ஸ் என்று கூறப்படுகின்றது. இதற்கான தேதிகள் முன்னரே தீர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. அதன் படி குறிப்பிட்ட சதவிகித வரி செலுத்தப்படுகின்றது. 

அட்வான்ஸ் வரியை யார் செலுத்த வேண்டும்?

அட்வான்ஸ் டாக்ஸ் வரி செலுத்துவோரின் சாத்தியமான வருமானத்தைப் பொறுத்தது. வேலை அல்லது வணிகம் மூலம் நிதியாண்டில் ரூ.10,000 அல்லது அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள் இந்த வரியைச் செலுத்த வேண்டும். அட்வான்ஸ் வரி செலுத்துவதற்கான விதிகள் என்ன? அதை பற்றி இங்கே காணலாம்.

- இந்த வரியின் வரம்பிற்குள் வருபவர்கள் தாங்கள் வருமானம் ஈட்டிய நிதியாண்டு முடிவதற்குள் முன்பண வரி செலுத்த வேண்டும்.
- அட்வான்ஸ் டாக்ஸ் வரம்பிற்குள் வராதவர்கள், நிதியாண்டு முடிந்த ஜூலை 31ம் தேதி வரை வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். 
- சில சிறப்பு சூழ்நிலைகளில், வருமான வரித்துறை இந்த காலக்கெடுவை நீட்டிக்கக்கூடும்.
 
மேலும் படிக்க | EPFO: அதிகபட்சமாக உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இபிஎஸ் ஓய்வூதிய கால்குலேட்டர் இதோ

எப்போதெல்லாம் அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்த வேண்டும்?

அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்துவதற்கான காலக்கெடு டிசம்பர் 15 ஆகும். டிசம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் டிசம்பர் 16ம் தேதி வரை பணம் கட்டலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நான்கு தவணைகளில் அட்வான்ஸ் வரி டெபாசிட் செய்யப்படுகிறது. 

- ஜூன் 15 -க்குள் 15 சதவீதம்
- செப்டம்பர் 15 -க்குள் 45 சதவீதம்
- டிசம்பர் 15 -க்குள் 75 சதவீதம்
- மார்ச் 15 -க்குள் 100 சதவீதமும் வரி செலுத்த வேண்டும்.

அட்வான்ஸ் டேக்ஸ்: ஆன்லைனில் இதை செலுத்துவது எப்படி? (How To Pay Advance Tax Online)

- வருமான வரி இணையதளத்திற்குச் செல்லவும்.

- 'E-Pay Tax' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- உங்கள் PAN மற்றும் பாஸ்வர்டை உள்ளிடவும்.

- "Advance Tax" என்பதைக் கிளிக் செய்து, உங்களுக்கு விருப்பமான கட்டண முறையைத் தேர்ந்தெடுக்கவும்.

- "Make Payment Now" பொத்தானைக் கிளிக் செய்து கட்டணத்தை செலுத்தி முடிக்கவும்.

- பணம் செலுத்திய பிறகு, உங்கள் கட்டணத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு ரசீதைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: வலுக்கும் கோரிக்கை, அதிகரிக்கும் அழுத்தம், குட் நியூஸ் கொடுக்குமா மத்திய அரசு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News