11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளால் ஸ்தம்பித்த இணையம்!

ஆந்திர பிரதேச மாநில பள்ளி தேர்வுகுழு 11-ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது!

Last Updated : Apr 13, 2018, 03:27 PM IST
11-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளால் ஸ்தம்பித்த இணையம்! title=

ஆந்திர பிரதேச மாநில பள்ளி தேர்வுகுழு 11-ஆம் வகுப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது!

மாநில கல்வி துறை அமைச்சர் கண்டா சீனிவாச ராவ் அவர்கள் இன்று விசாகப்பட்டினத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். சுமார் 4,78,621 பேர் எழுதிய இந்த தேர்வில் 2,95,891 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 62% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்ச்சி விகிதத்தினை பொருத்தவரை கிருஷ்ணா மாவட்டம் 75% முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தினை கோதாவரி, குண்டூர் மாவட்டங்கள் பகிர்ந்துக்கொண்டன. 

மூன்றாம் இடத்தினை கடப்பா மாவட்டம் பெற்றுள்ளது எனவும் பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மறுதேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும், வரும் மே 14-ஆம் நாள் இந்த மறுத்தேர்வு நடைப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வின் முடிவுகளை மாணவர்கள் bieap.gov.in மற்றும் http://www.examresults.net/ap-board-result/inter/ என்ற இணையத்தளங்களில் தெரிந்துக்கொள்ளலாம்.

Trending News