இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி: குழந்தைகளை பாதுகாக்க WHO எச்சரிக்கை

WHO Health Alert: ஹரியானாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 66 குழந்தைகள் மரணித்ததை அடுத்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் சிரப்கள் குறித்த எச்சரிக்கை 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 6, 2022, 08:36 AM IST
  • உயிர் பலிவாங்கும் இருமல் சிரப்கள் குறித்த எச்சரிக்கை
  • இந்திய தயாரிப்புகள் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை
  • இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி
இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் பலி: குழந்தைகளை பாதுகாக்க WHO எச்சரிக்கை title=

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் சிரப்கள் தொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்துகளில் இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. நச்சுத்தன்மை வாய்ந்த அந்த ராசாயனங்கள் ஆபத்தானவை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு மருந்துகள், கடுமையான சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்துகின்றன. இந்த மருந்தை குடித்த 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக இருப்பதால், மருத்துவ எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்று WHO வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், குழந்தைகளின் மரணம் கவலைகளை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.  

WHO எச்சரிக்கை விடுத்துள்ள நான்கு இருமல் சிரப்கள்

ஃபோர் மெடிசின்ஸ் என்பது மைடன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப் ஆகும். இந்தியாவில் உள்ள நிறுவனம் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் இணைந்து WHO மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. செப்டம்பரில் வெளியிடப்பட்ட நான்கு தரமற்ற தயாரிப்புகள் ப்ரோமெதாசின் வாய்வழி கரைசல், கோஃபாக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ஆகியவை என WHO மருத்துவ தயாரிப்பு எச்சரிக்கை தெரிவிக்கிறது. இந்த சிரப்கள் அனைத்தும் ஹரியானாவை தளமாகக் கொண்ட மைடன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | வினிகருடன் கூட்டு வைக்கும் வெங்காயம்: ஆரோக்கியத்திற்கு நன்மையா

டைதிலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால்

இந்த குறிப்பிட்ட மருந்து உற்பத்தியாளர், இந்த தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த WHO உத்தரவாதத்தை பெறவில்லை என்பதைக் குறிப்பிடும் உலக சுகாதார அமைப்பு, நான்கு தயாரிப்புகளிலிருந்தும் மாதிரிகளின் ஆய்வக பகுப்பாய்வு தரவுகள் அதிர்ச்சியளிப்பதாக கூறுகிறது. இந்த மருந்துகளின் மாதிரிகளில், அவைடைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் ஆகியவை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, ஏற்றுக்கொள்ள முடியாத அளவு கிளைகோல் இருக்கிறது. இவை இரண்டும் நச்சுத்தன்மை வாய்ந்தவை, அவற்றை உட்கொள்வது ஆபத்தானது.

இந்த சிரப்கள் கடுமையான நோய் அல்லது மரணத்தை ஏற்படுத்தலாம்

இந்த சிரப்கள் அனைத்தும் பாதுகாப்பற்றவை மற்றும் அவற்றின் பயன்பாடு கடுமையான நோய் அல்லது மரணத்தை விளைவிக்கலாம் என்று WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த சிரப்புகள், வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மன நிலை மாறுதல் மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அனைத்து நாடுகளுக்கும் அறிவுறுத்தல்

தொடர்புடைய தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்படும் வரை, இந்த தயாரிப்புகளின் அனைத்து தொகுதிகளும் பாதுகாப்பற்றதாக கருதப்பட வேண்டும் என்று WHO கூறியது. இவற்றில் நான்கு தயாரிப்புகள் காம்பியாவில் அடையாளம் காணப்பட்டாலும், அவை முறைசாரா சந்தைகள் மூலம் பிற நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, அனைத்து நாடுகளிலும் உள்ள நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க, இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அகற்ற வேண்டும் என WHO பரிந்துரைத்துள்ளது.

மேலும் படிக்க | 'வன்புணர்வு வழக்கை ரத்து செய்கிறோம்... ஆனால்' - நீதிமன்றம் போட்ட வித்தியாசமான கண்டிஷன்

அனைத்து மருத்துவ தயாரிப்புகளும் அங்கீகரிக்கப்பட்ட/உரிமம் பெற்ற சப்ளையர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் என்று WHO எச்சரிக்கை கூறுகிறது. கூடுதலாக, தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் உடல் நிலை கவனமாக சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், சந்தேகம் இருந்தால் ஒரு தொழில்முறை மருத்துவரை அணுக வேண்டும்.

உங்களிடம் இந்த சிரப் இருந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம்: WHO

உங்களிடம் இந்த தரமற்ற தயாரிப்புகள் இருந்தால், தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவர் இந்தத் தயாரிப்புகளைப் பயன்படுத்தியிருந்தால் அல்லது பயன்பாட்டிற்குப் பிறகு ஏதேனும் பாதகமான எதிர்வினை/நிகழ்வைச் சந்தித்திருந்தால், உடனடியாக தகுதி வாய்ந்த நிபுணத்துவ மருத்துவரிடம் ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள் என்று WHO மேலும் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள், இந்த விஷயத்தை உடனடியாக தேசிய ஒழுங்குமுறை ஆணையம் அல்லது தேசிய மருந்து கண்காணிப்பு மையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதலாக, தேசிய ஒழுங்குமுறை/சுகாதார அதிகாரிகள் அந்தந்த நாடுகளில் இந்த தரமற்ற தயாரிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக உலக சுகாதார அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க | துர்கா பூஜை சிலைக் கரைப்பின் போது ஆற்றில் வெள்ளம்: 7 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News