Healthy Snacks To Lose Weight : நம்மில் பலருக்கும் வெயிட்டை குறைக்க வேண்டும் என்கிற என்னம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள், டீயுடன் சாப்பிட வேண்டிய சில உணவு பொருட்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Healthy Snacks To Lose Weight : உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கு தீர்க்க முடியாத பிரச்சனையாக இருக்கிறது. இதனால் பலரும் பலவித உடல் உபாதைகளை அனுபவித்து வருகின்றனர். இதற்காக டயட்டில் இருக்க பலருக்கும் ஆசை இருந்தாலும், தினசரி இருக்கும் பழக்கங்களை விட்டுக்கொடுக்க முடியாமல் இருக்கும். அதில் ஒன்று டீ குடிப்பது. அப்படி, டீ குடித்தாலும் நாம் உடல் எடை குறைக்க வேண்டுமென்றால் அந்த டீயுடன் ஹெல்தியான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன தெரியுமா?
குவாக்காமோலுடன் கேரட்: அவகேடோவை வைத்து செய்யும் குவாக்காமோலுடன் கேரட்டை தொட்டு சாப்பிடலாம். கேரட்டுகளில் கலோரிக்கள் குறைவாகவும், ஃபைபர் அதிகமாகவும் உள்ளது. இதனால் உடலில் நல்ல கொழுப்பு மட்டுமே சேரும்.
ஆப்பிள்-பீனட் பட்டர்: ஆப்பிளில் ஃபைபர் சத்துகள் அதிகமாக உள்ளது. இதனுடன் பீனட் பட்டரும் சேர்த்து சாப்பிடுவதால் வயிறு முழுமையாக இருக்கும். பசி உணர்வும் அடிக்கடி ஏற்படாது.
ராகி பிஸ்கட்டுகள்: ராகி பிஸ்கட்டுகளில் புரத சத்துகள் அதிகம் இருக்கிறது. அது மட்டுமன்றி டீயில் தொட்டு சாப்பிட சிறப்பான ஸ்நாக்ஸ் இது. இது உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்க செய்யும்.
பாசிப்பருப்பு: பாசிப்பருப்பை சாட் ஆக செய்து சாப்பிடலாம். இது, மாலை தேனீருக்கு ஏற்ற சரியான ஸ்நாக்ஸ் ஆகும். இந்த சாட்டில் கொஞ்சம் வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றை சேர்த்து சாப்பிட்டால் சிறிது நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும்.
வேர்கடலை சாட்: வேர்கடலையை வேக வைத்து அதனை சாட் ஆக சாப்பிடலாம். இது, வெயிட் லாஸ் செய்ய உதவும் ஒரு உணவு என்றும் கூறப்படுகிறது. இதில் இருக்கும் புரதம் மற்றும் ஃபைபர் சத்துகள் நீண்ட நேரத்திற்கு அதீத பசி எடுப்பதை தவிர்க்கும்.
தோக்ளா: இது ஒரு குஜராத்தி உணவாகும். இதனை ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை வைத்து செய்கின்றனர். இலகுவாக செரிமானம் ஆகும் இந்த உணவையும் வெயிட் லாஸ் ஆக டீயுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வறுத்த மக்கானா: புரதம், ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் ஃபைபர் சத்துகள் நிறைந்த உணவு, மக்கானா. இதனை வறுத்து, டீயுடன் சேர்த்து சாப்பிடலாம். வெயிட் லாஸுக்காக டயட்டில் இருக்கும் பலர் தங்கள் உணவு பட்டியலில் வைத்திருக்கும் ஒரு உணவு இது. பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.