ஐபிஎல் 2025 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பல புதிய வீரர்கள் எடுத்துள்ளனர். இதனால் மும்மை அணியின் பிளேயிங் 11ல் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் வில் ஜாக்ஸ் ஓப்பராக இறங்கலாம். இவர்களது அதிரடி தொடக்கம் அணிக்கு பக்க பலமாக இருக்கும். பேக் அப் வீரராக பெவன் ஜான் ஜேக்கப்ஸ் உள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த பேட்டிங் ஆல்-ரவுண்டரான நமன் திர் 3வது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது. அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவார்.
இந்தியாவின் டி20 கேப்டனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்காக சமீபத்திய போட்டிகளில் 4வது இடத்தில் களமிறங்கி வருகிறார். மேட்ச்-வின்னரான இவர் போட்டியை மாற்ற கூடும்.
கடந்த சில ஆண்டுகளாக திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5-வது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார். இந்த முறையும் அணியின் தன்மை பொறுத்து அதே இடத்தில் களமிறங்கலாம் அல்லது 3வது இடத்தில் களமிறங்கலாம்.
ஆல்-ரவுண்டர் கேப்டன் ஹர்திக் பாண்டியா 6வது இடத்தில் பேட் செய்வார். ராபின் மின்ஸ் ஃபினிஷராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை தொடர்ந்து தீபக் சாஹர் விளையாடலாம்.
அவரை தொடர்ந்து மிட்செல் சான்ட்னர் அணியில் இடம்பெறலாம். இன்னொரு ஸ்பின்னராக அல்லா கசன்ஃபர் விளையாடலாம். ஜஸ்பிரித் பும்ரா 11வது வீரராகவும், ட்ரெண்ட் போல்ட் இம்பாக்ட் வீரராகவும் செயல்பட வாய்ப்புள்ளது.