ப்ரெக்ஸிட் முடிவை தாமதப்படுத்த EU ஒன்றியத்திற்கு ஜான்சன் கோரிக்கை..!

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவை தாமதப்படுத்த வேண்டும் என இங்கிலாந்து எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்..!

Last Updated : Oct 20, 2019, 07:29 AM IST
ப்ரெக்ஸிட் முடிவை தாமதப்படுத்த EU ஒன்றியத்திற்கு ஜான்சன் கோரிக்கை..! title=

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் முடிவை தாமதப்படுத்த வேண்டும் என இங்கிலாந்து எம்பிக்கள் வாக்களித்துள்ளனர்..!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து விலகிச் செல்லும் விவகாரம் பிரக்ஸிட் என அழைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்தில் பெருத்த சிக்கலை ஏற்படுத்தி வரும் இந்த பிரச்சனையால் டேவிட் கேமரூன், தெரசா மே ஆகியோர் பிரதமர் பதவியை இழந்தனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள போரிஸ் ஜான்சன் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நிறைவேறும் என உறுதிபடக் கூறியிருந்தார். இந்நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வரலாற்று சிறப்புமிக்க வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ஒப்பந்தத்தை பிரிட்டனில் உள்ள முக்கிய எதிர்கட்சிகள் எதிர்த்தன.

இந்நிலையில் நேற்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் குறித்த முடிவை தாமதப்படுத்த வேண்டும் என்று இங்கிலாந்து எம்.பி.க்கள் வாக்களித்தனர். அக்டோபர் 31 காலக்கெடுவுக்கு முன்னர் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களைப் படித்து பார்க்க கால அவகாசம் தேவை என்று அப்போது அவர்கள் வாதிட்டனர்.

மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி வரை பிரக்ஸிட் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று எம்பிக்கள் கோரியபடி புதிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் 322 பேர் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாகவும், 306 பேர் சட்டத்திருத்தத்திற்கு எதிராகவும் வாக்களித்தனர். இதனால் போரிஸ் ஜான்சன் கூறியபடி வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பிரக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அரசியல் ரீதியாக பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

 

Trending News