பகீர் தகவல்! பல பேரை காவு வாங்கிய உலகின் மர்மமான ‘தற்கொலை காடு’..!!

தற்கொலை காடு என அழைக்கப்படும் மர்ம காடு ஜப்பானில் அமைந்துள்ளது இந்தக் காட்டின் பெயர் 'ஒகிகஹாரா'. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 16, 2021, 12:47 PM IST
  • ஜப்பானில் உள்ள உலகின் மிக மர்மமான காடு
  • காடுகளைப் பற்றிய பல திகில் கதைகள் பிரபலமானவை
  • 2003 முதல் இதுவரை 105 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பகீர் தகவல்! பல பேரை காவு வாங்கிய உலகின் மர்மமான ‘தற்கொலை காடு’..!! title=

The Suicide Forest: உலகம் எண்ணற்ற ரகசியங்களாலும் மர்மங்களாலும் நிறைந்துள்ளது. பெரும்பாலான மர்மங்களை, மனிதர்கள் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும் கூட புரிந்து கொள்ள முடியவில்லை . அப்படிப்பட்ட ஒரு மர்மமான காடு, ஜப்பானில் அமைந்துள்ளது. இந்தக் காட்டின் பெயர் 'அகிகஹாரா தற்கொலைக் காடு' (Aokigahara Suicide Forest). இங்கு வரும் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதாக இந்த வனத்தைப் பற்றி கூறப்படுகிறது. இதனால் இந்த காடு 'தற்கொலை காடு' என அழைக்கப்படுகிறது.

மர்மம் நிறைந்த காடு

பசுமையான மற்றும் அழகாக தோற்றமளிக்கும் காடு உலகம் முழுவதும் திகில் கதைகளுக்காக அறியப்படுகிறது. இது உலகின் மிகவும் பிரபலமான தற்கொலை இடங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது இதில் கோல்டன் கேட் முதலிடத்தில் உள்ளது. டோக்கியோவிலிருந்து இந்த மர்ம வனத்தின் தூரம் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரத்தில் உள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வனத்தின் மர்மம் (Mystery Story) பயமுறுத்தும் வகையில் உள்ளது. 

ALSO READ | Viral video of Python: தென்னை மரத்தில் மிக லாவகமாக ஏறும் மலைப்பாம்பு..!!

தற்கொலையை தூண்டும் பேய்கள் 

இந்த காட்டில் பேய்கள் இருப்பதாக ஜப்பான் மக்கள் நம்புகிறார்கள். அதே பேய்கள் மக்களை தற்கொலைக்கு தூண்டுகின்றன. இந்தக் காட்டுக்குள் நுழையும் இடத்தில் கீழ்கண்ட எச்சரிக்கையைப் படிக்கலாம். 

உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தைப் பற்றி கவனமாக சிந்தியுங்கள்.

உங்கள் வாழ்க்கை உங்கள் பெற்றோர் கொடுத்த விலைமதிப்பற்ற பரிசு.

போனால் திரும்பி வராத உயிர்

இந்த காடு பியூஜி மலையின் வடமேற்கில் அமைந்துள்ளது. இது 35 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த காடு மிகவும் அடர்த்தியானது. இது 'மரங்களின் கடல்' என்று அழைக்கப்படுகிறது. இந்த அடர்ந்த காட்டில் ஒரு முறை தொலைந்து போனால், இங்கிருந்து வெளியே வருவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. பலர் தற்கொலை (Suicide) செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 2003 முதல் இந்த காட்டில் 105 க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அதிகாரபூர்வ தகவல்கள் கிடைக்கின்றன. இந்த சடலங்களில் பெரும்பாலானவை மோசமாக சிதைந்து காணப்பட்டன. சிலவற்றை காட்டு விலங்குகள் தின்றுவிட்டன.

ALSO READ | திடீரென கணக்கில் வந்த ஒரு கோடி பணம்; வரம் என நினைத்தது சாபமானது..!!

அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் வழிதவறிச் செல்லும் மக்கள் பயந்து உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறப்படுகிறது. இந்த காட்டில் compass needle என்னும் திசை காட்டும் ஊசி அல்லது மொபைல் போன்ற கருவிகள் வேலை செய்யாது. Compass Needle இங்கே சரியான பாதையைக் காட்டாது. காடுகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் காட்டில் இருந்து இரவில் அலறல் சத்தம் கேட்பதாக கூறுகின்றனர். இந்தக் காட்டில் உள்ள பல மரங்கள் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Watch Viral video: மலைப்பாம்பின் வாயில் சிக்கிய கோழியின் நிலை என்ன..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News