ஊழியருக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்யத்தவறினால் அவர் கரப்பான் பூச்சி உண்ணவேண்டும் என புதிய தணடனையை வழங்கியுள்ளது தனியார் நிறுவனம்....
சீனாவில் இருக்கும் வீடு பராமரிக்கும் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஊழியர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும் வேலையைச் செய்ய தவறினால் சிறுநீர் குடிக்க வேண்டும், கரப்பான் பூச்சி உண்ண வேண்டுமாம். இல்லை என்றால் பெல்ட்-ஆல் அடிக்கும் நூதன தண்டனைகளை கொடுத்து வருகிதாம்.
அதுமட்டும் இன்றி மற்றவர்கள் தங்களின் தலைமுடியை ஷேவ் செய்து கொள்ள வேண்டும், டாய்லெட்டில் இருக்கும் தண்ணீரை பருக வேண்டுமாம். அதுமட்டும் இல்லை பாஸ் அந்த ஊழியரின் 1 மாத சம்பளமும் பிடிக்கப்படும் என சீனாவில் ஒரு ஊடகச் செய்தியில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது.
ஒருவேளை ஊழியர்கள் லெதர் ஷூ அணியவில்லை என்றாலோ, பணிக்கு வரும் போது நேர்த்தியான உடையில் வரவில்லை என்றாலோ 50 யுவான் (7.50 டாலர்) அபராதம் போடப்படுகிறது. இப்படி இருந்தும் பல ஊழியர்கள் இங்கு குடும்பசூல்நிலை காரணமாக வேலை பார்க்கிறார்கள்.
ஊழியர்களை இழிவாக நடத்தியதால், அந்த நிறுவனத்தின் மூன்று மேனேஜர்கள் இதுவரை சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதுகுறித்து ஒருவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த தண்டனைகள் அனைத்தும் மற்ற ஊழியர்கள் முன்னிலையில் நடைபெறும். இதனால், அந்த ஊரில் இருக்கும் ஊழியர்கள் பலரும் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.