கடும் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடியில் இலங்கை சிக்கித் தவிக்கும் நிலையில், மக்கள் போராட்டம் வலுப்பெற்று, போராட்டத்தை ஒடுக்க அரசு எடுத்த அடக்குமுறையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில், அதன் பிரதமராக இருந்த மகிந்தா ராஜபக்ஷேயின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. முன்னதாக பிரதமர் பதவியில் விலகிய ராஜபக்ஷே தனது வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், இலங்கையில் நிலவும் நெருக்கடி நிலையை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இடைக்கால அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், அதிபரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக பதவியேற்கத் தயாராக இருப்பதாக இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர் தற்போது தனது கொழும்பு அலுவலகத்தில் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்துப் பேசுகிறார்.
மேலும் படிக்க | இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களுடன் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துரையாடல்
பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) தலைவர் பிரேமதாச, அதிபர் முதலில் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமராக பதவி ஏற்க மறுத்திருந்தார். அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மாத்திரமே பிரேமதாச பிரதமராவார் என எஸ்ஜேபியின் முக்கிய பிரமுகர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருந்தார்.
புதனன்று, SJB அதிபருக்கு நான்கு அம்சக் கடிதம் ஒன்றை எழுதியது. அதில் குறிப்பிட்ட காலத்தில் அவர் பதவி விலக வேண்டும் என்பது உட்பட, அன்றாட நடவடிக்கைகளில் அவர் தலையிடக் கூடாது; இடைக்கால அரசாங்கத்திற்கான அமைச்சரவை நியமனத்தில் தலையிடக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கபப்ட்டிருந்தது.
அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் சட்டத்தை நீக்கி, இரண்டு வாரங்களுக்குள் 19வது திருத்தத்தை மீண்டும் அமல் படுத்தி, குறிப்பிட்ட காலத்திற்குள் அதிபர் பதவி விலகினால் நாளை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தான் தயாராக உள்ளேன் என அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Sri Lanka Crisis: மீண்டும் மீண்டும் இந்தியா நீட்டும் உதவிக்கரம், நெகிழும் இலங்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR