உக்ரைன் மீது KH-22 என்னும் பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன்

Russia-Ukraine War: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி 109 நாட்கள் ஆகியுள்ள நிலையில், போர் முடிவடையும் சாத்தியக் கூறுகள் எதுவும் தெரியவில்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 12, 2022, 05:08 PM IST
  • உக்ரைன் முற்றிலும் அழிந்து விடுமா என்ற அச்சம் நிலவுகிறது.
  • உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி 109 நாட்கள் ஆகியுள்ளது.
  • போர் முடிவடையும் சாத்தியக் கூறுகள் எதுவும் தெரியவில்லை.
உக்ரைன் மீது KH-22 என்னும் பிரம்மாஸ்திரத்தை ரஷ்யா ஏவக் கூடும்: எச்சரிக்கும் பிரிட்டன் title=

 

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கி 109 நாட்கள் ஆகியுள்ள நிலையில், போர் முடிவடையும் சாத்தியக் கூறுகள் எதுவும் தெரியவில்லை. இதற்கிடையில், பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் இரு நாடுகளின் தற்போதைய நிலைமை குறித்து முக்கிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர்.

ரஷ்ய இராணுவம் பேரழிவை ஏற்படும் ஆயுதங்களைப் உக்ரைன் மீது பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் மற்றும் இங்கிலாந்து அதிகாரிகள் சனிக்கிழமை எச்சரித்தனர். உக்ரைனின் கிழக்குப் பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் மேலும் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்றும், நீண்டகாலப் போரால் இரு நாடுகளின் வளங்களும் குறைந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், ரஷ்ய குண்டுவீச்சு விமானங்கள் உக்ரைனில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும், இந்த ஏவுகணைகள் முதன்முதலில் 1960ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்டன எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் முக்கிய ராணுவ கூட்டத்தின் போது மயங்கி விழுந்தாரா; வெளியான பகீர் தகவல்

KH-22 என்னும் இந்த ஏவுகணைகள் முதன்மையாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் விமானம் தாங்கி கப்பல்களை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இது பயன்படுத்தப்பட்டால், உக்ரைன் முற்றிலும் அழிந்து விடுமா என்ற அச்சம் நிலவுகிறது. தரை தாக்குதல்களில் பயன்படுத்தப்படும் போது, ​​KH-22 ஏவுகணைகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனவும் இதனால், பெருமளவிலான உயிர் மற்றும் சொத்து இழப்புகளை ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யா 5.5 டன் எடையுள்ள கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தக் கூடும் எனக் கூறியுள்ளது.

உக்ரைன்-ரஷ்யா போர் உலகளாவிய உணவு சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் 11 முதல் 19 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடக்கூடும் என்று ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News