இரண்டாவது முறையாக சட்ட உதவியை பெற்றார் Kulbhushan Jadhav ..!!!

குல்பூஷன் ஜாதவ்வை நிபந்தனை ஏதும் இன்றி அணுக வேண்டும் என  வெளியுறவுத் துறை முன்னதாக கூறியிருந்தது.

Last Updated : Jul 16, 2020, 05:17 PM IST
  • கும்பூஷன் ஜாதவ் அவர்கள் ஈரானிலிருந்து இஸ்லாமாபாத் நுழைந்ததாக கூறி 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி அன்று பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் அவரை பலுசிஸ்தானில் கைது செய்தன.
  • அவர் இரானின் சாபஹார் துறைமுகத்தில் வர்த்தகம் நடத்தி வந்ததாக இந்தியா கூறுகிறது.
  • 2017 ஆம் ஆண்டு முதல், நெறிமுறைகள் ஏதுமின்றி பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இரண்டாவது முறையாக சட்ட உதவியை பெற்றார் Kulbhushan Jadhav ..!!! title=

பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் இந்திய கப்பல் படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ்விற்கு இரண்டாது முறையாக சட்ட உதவி  வழங்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது.

குல்பூஷன் ஜாதவ்வை (Kulbhushan Jadhav ) நிபந்தனை ஏதும் இன்றி அணுக வேண்டும் என  வெளியுறவுத் துறை முன்னதாக கூறியிருந்தது.

குல்பூஷன் ஜாதவ் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மறுத்துவிட்டார் என்று பாகிஸ்தான் கூறியது. ஆனால், இந்தியா சீராய்வு மனுவை போடுவதற்கு கும்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை என்ன குற்றம் சாட்டியுள்ளது.

ALSO READ | பெண் வேடத்தில் களமிறங்கி கிளார்க்காக பணியாற்றும் எந்திரன் ரோபோ!!

இந்திய நாட்டை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ்விற்கு, அனைத்து சட்டம் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்து, இந்தியா ஆராய்ந்து வருவதாகவும், இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் இந்தியா உறுதி கூறியது.

குல்பூஷன் ஜாதவ் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய மறுத்துவிட்டார் என்று கூறும் பாகிஸ்தானின் கூற்று, கடந்த நான்கு வருடங்களாக நடத்திவரும் பாகிஸ்தானின் மோசடி நாடகத்தின் தொடர்ச்சி என்றும், இந்திய நாட்டைச் சேர்ந்த முன்னால் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவின் உயிரை காப்பாற்ற அனைத்து விதமான சட்ட வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா, செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

ALSO READ | சீனா திரும்ப காத்திருக்கும் தமிழக பரோட்டா மாஸ்டர்கள்: சுவாரஸ்யமான மறுபக்கம்

பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்வதற்கான சட்டம் வாய்ப்புகளைக் ஆராய, நிபந்தனை ஏதுமின்றி குல்பூஷன் ஜாதவை சந்திக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

கும்பூஷன் ஜாதவ் அவர்கள் ஈரானிலிருந்து இஸ்லாமாபாத் நுழைந்ததாக கூறி 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி அன்று பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் அவரை பலுசிஸ்தானில் கைது செய்தன.

அவர் உளவு வேலையில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து நிராகரித்து வரும் இந்தியா, அவர் இரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் வணிகம் நடத்தி வந்தார் எனவும் அவர் கடத்தப்பட்டதாகவும் கூறுகிறது.

2017 ஆம் ஆண்டு முதல், நெறிமுறைகள் ஏதுமின்றி விசாரணை நடத்தி வரும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, ஆதாரங்கள், ஆவணங்கள் எதையும் இந்தியாவிற்கு கொடுக்க மறுத்துவிட்டது. இதன் அடிப்படையில் சர்வதேச நீதிமன்ற (ICJ)நெறிமுறைகளை பாகிஸ்தான் கடைப்பிடிக்கவில்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது என வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

Trending News