கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய மோதலில் 24,100 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தரப்பில், 1,140 பேர், என இந்தப் போரின் பலி எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துவிட்டது. இது அதிகாரபூர்வமாக இரு நாடுகளும் அளித்த தகவல் என்றால், இவற்றைத் தவிர, வேறு சேதங்களும் மக்கள் படும் துயரங்களும் மிகவும் கொடுமையானது. இந்தப் போரில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்பது கவலைகளை அதிகரிக்கிறது.
பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். காசாவின் மருத்துவமனைகளில் நிலைமை மோசமாகியிருக்கும் நிலையில், அவசர மருத்துவ உதவியும் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் 100 நாட்களைத் தாண்டியுள்ளது. தெற்கு காசா பகுதியில் ஹமாஸ் மீதான தீவிர தாக்குதலின் உச்ச கட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, வடக்கு காசாவில் ஏற்கனவே நிலைமை தீவிர கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறினார்.
மேலும் படிக்க | யார் இந்த குர்பத்வந்த் சிங் பன்னுன்? இவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு?
நேற்று (செவ்வாய், ஜனவரி 16) கத்தார், பாலஸ்தீனிய குடிமக்களுக்கு மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஈடாக காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு மருந்துகளை வழங்குவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று உருவானது.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள துல்கரேம் நகரில் புதன்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. "பாலஸ்தீன செஞ்சிலுவை குழுக்கள் ஆக்கிரமிப்பின் குண்டுவீச்சு காரணமாக துல்கரேம் முகாமுக்குள் இருந்து நான்கு தியாகிகளை ஏற்றிச் செல்கின்றன" என்று குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காசாவில் போருக்கு மத்தியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,448 ஆக உயர்ந்துள்ளது என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | திக்குமுக்காடும் ஏமன்; அமெரிக்காவும் இங்கிலாந்தும் இணைந்து தாக்குதல் -முழு பின்னணி
பாலஸ்தீன பகுதியில் சுமார் 61,504 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணயக் கைதிகளுக்கான மருந்துகளை ஏற்றிச் சென்ற கத்தார் விமானம் எகிப்தை வந்தடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.
காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கான மருந்துகளை ஏற்றிச் சென்ற இரண்டு கத்தார் இராணுவ விமானங்கள் எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் உள்ள எல்-அரிஷ் என்ற இடத்திற்கு வந்ததாக அரபு ஊடக அறிக்கைகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த மருந்துப் பொருட்கள் காசா பகுதிக்கு கொண்டு செல்லப்படும். காசாவிற்கு செய்யும் உதவிக்கு ஈடாக, போராளிக் குழுவால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகளுக்கு முக்கியமான மருந்துகளை வழங்குவதற்காக, கத்தாரின் தலையீட்டில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கத்தார் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் இந்த மருந்து அனுப்பும் முயற்சியை சாத்தியமாக்கியுள்ளது.
இதனிடையில், பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற பயங்கரவாத அமைப்பின் இரண்டு முக்கிய தலைமையகங்களை ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்தது.
மேலும் படிக்க | ஹமாஸ் இஸ்ரேல் போருக்கு மத்தியில், பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய ஈரான்! இருவர் பலி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ