மன்னர் சார்லஸின் வீங்கிய விரல்கள்... மருத்துவர்கள் கூறுவது என்ன..!!

இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத், செப்டம்பர் 8 அன்று தனது 96 வயதில் இறந்த நிலையில்,தற்போது அவரது மகன் மூன்றாம் சார்லஸ் மன்னராக பதவியேற்கவுள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2022, 12:06 PM IST
  • மன்னர் சார்லஸ் III இங்கிலாந்தின் புதிய மன்னராகப் பதவியேற்க உள்ளார்.
  • மூட்டுவலி நோயாளிகளும் விரல் வீக்க பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • வீட்டிலேயே இருந்து கல்வி கற்காத முதல் அரச வாரிசு சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் சார்லஸின் வீங்கிய விரல்கள்... மருத்துவர்கள் கூறுவது என்ன..!! title=

மன்னர் சார்லஸ் III இங்கிலாந்தின் புதிய மன்னராகப் பதவியேற்க உள்ளார்.  இன்கிலாந்தின் ராணியும் சார்லஸின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு அவர் மன்னராக  முடிசூட்டப்படுகிறார். இதற்கிடையில் அவரது உடல நிலை குறித்த செய்தி பலரை கவலைக்குள்ளாக்கியுள்ளது. உண்மையில், கிங் சார்லஸ் III இன் படம் சமூக ஊடகங்களில் பெரிய முறையில் வைரலாகி வருகிறது. அதில் அவரது கைகளின் விரல்கள் வீங்கியிருக்கும் நிலையில், இது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன. சிலர் மன்னர் சார்லஸ் III நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். மூன்றாம் சார்லஸ் மன்னரின் வீங்கிய விரல்களை மருத்துவர்கள் கூறுவது என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

மூன்றாம் சார்லஸ் மன்னரின் வயது தற்போது 73. இங்கிலாந்தை நீண்டகாலம் அரசாட்சி செய்த இரண்டாம் எலிசபெத் மகாராணி வியாழன் அன்று தனது 96 வது வயதில் காலமானதை அடுத்து, மூன்றாம் சார்லஸ் மன்னர், அரியணை ஏற உள்ளார். இங்கிலாந்தின் மன்னரான மூன்றாம் சார்லஸுக்கு எடிமா அல்லது ஆர்த்ரைட்டிஸ் பிரச்சனை இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது அவரது கைகளின் விரல்களை பாதித்து அவை வீங்கியிருக்கிறது என கூறுகின்றனர்.

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு எடிமா பிரச்சனை இருக்கலாம் என்று டாக்டர் கரேத் அச்சம் வெளியிட்டுள்ளார். இதில் உடல் உறுப்புகளில் திரவம் தக்க வைக்கப்படுகிறது. பொதுவாக, இது பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர, விரல்களிலும் வீக்கத்தை காணலாம். எடிமா ஒரு பொதுவான நிலை. பெரும்பாலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை இது பாதிக்கிறது.

மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்..!!

மன்னரின் உடல்நிலை குறித்து டாக்டர் கரேத் மேலும் கூறுகையில், மூட்டுவலி நோயாளிகளும் விரல் வீக்க பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம். இதனால், கைகளில் உள்ள கட்டைவிரல் மூட்டு மற்றும் விரல்களின் பிற மூட்டுகளில் வீக்கம் ஏற்படுகிறது. விரல்கள் பொதுவாக வீங்கும். மருந்து வலியைப் போக்க உதவுகிறது என்றாலும், தொடர்ந்து வீக்கம் இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

பிரிட்டனின் அரியணையில் அமரும் மூத்த மன்னர் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டிலேயே இருந்து கல்வி கற்காத முதல் அரச வாரிசு சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.  இங்கிலாந்தின் அரச குடும்பத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள தூரம் குறைந்துகொண்டே வரும் காலகட்டத்தில், பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று, ஊடகங்களின் கூர்மையான பார்வையில் வாழ்க்கை நடத்திய முதல் வாரிசும் இவர் தான்.

மேலும் படிக்க | இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்: பிரிட்டனின் சூரியன் அஸ்தமமானது

மேலும் படிக்க | பாகுபலி-2: இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News