துருக்கி தேர்தல்... 20 வருட கால அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் எர்டோகன்!

உலக நாடுகள் துருக்கி தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. காரணம் துருக்கி நேட்டோ நாடுகளின் ஒரு அங்கம் என்பதுடன், அதன் நிலப்பரப்பு அமைந்துள்ள இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்று கூறப்பட்டாலும்,  ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2023, 09:59 AM IST
  • துருக்கி அதிபர் தேர்தலில் ரிசெப் தையிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார்.
  • செய்தி நிறுவனங்களின் அளிக்கும் வெவ்வேறு தகவல்கள்.
  • துருக்கி நேட்டோ நாடுகளின் ஒரு அங்கம் என்பதுடன், அதன் நிலப்பரப்பு அமைந்துள்ள இடம் முக்கியத்துவம் வாய்ந்தது.
துருக்கி தேர்தல்... 20 வருட கால அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளும் எர்டோகன்! title=

அங்காரா: இன்றைய தேதியில் புவிசார் அரசியலில் பரபரப்பாக நோக்கப் படுவது துருக்கியில் நடக்கும் தேர்தல். இதன் முடிவுகள் உலக நடப்பிற்கும், இந்தியாவுக்கும் கண்டிப்பாக பாதிப்பு உள்ளது என்பதால், உலக நாடுகள் இதனை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. காரணம் துருக்கி நேட்டோ நாடுகளின் ஒரு அங்கம் என்பதுடன், அதன் நிலப்பரப்பு அமைந்துள்ள இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. துருக்கி இஸ்லாமிய நாடுகளில், ஜனநாயகம் உள்ள ஒரே நாடு என்று கூறப்பட்டாலும்,  ஒருவிதமான சர்வாதிகாரம் கொண்ட நாடு தான். 1923ல் ஜனநாயக நாடாக உருவான துருக்கி, தன் 100வது ஆண்டில் காலடி வைத்திருக்கும் இந்த நேரத்தில் இந்த தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், துருக்கி அதிபர் தேர்தலில் ரிசெப் தையிப் எர்டோகன் வெற்றி பெற்றுள்ளார். அதிகாரப்பூர்வமற்ற தேர்தல் முடிவுகளின்படி, அவர் 53 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் கெமல் கெலிச்தரோஹ்லு (Kemal Kilicdaroglu) 47 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இதன் மூலம் எர்டோகன் மீண்டும் துருக்கியின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளார். முன்னதாக நடைபெற்ற தேர்தல்களில் எர்டோகன் மற்றும் கெலிச்டரோஹ்லு ஆகிய இருவராலும் பெரும்பான்மை பெற முடியவில்லை. துருக்கியில் அதிபராக வருவதற்கு, தேர்தலில் குறைந்தபட்சம் 50 சதவீத வாக்குகளைப் பெறுவது அவசியம். கடந்த தேர்தலில் எர்டோகன் 49.5 சதவீத வாக்குகளைப் பெற்றார். அத்தகைய சூழ்நிலையில், அவரது வெற்றிக்கான வலுவான வாய்ப்பு இருந்தது.

செய்தி நிறுவனங்களின் அளிக்கும் வெவ்வேறு தகவல்கள்

பல செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட துருக்கியின் இரண்டாம் சுற்று ஜனாதிபதித் தேர்தலின் ஆரம்ப மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள், 88 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டதாகக் காட்டுகின்றன. துருக்கியின் அரச செய்தி நிறுவனமான அனடோலு, எர்டோகனுக்கு 53 சதவீத வாக்குகளும், கெமாலுக்கு 47 சதவீத வாக்குகளும் கிடைத்ததாகக் காட்டியது. இதற்கிடையில், எதிர்க்கட்சியுடன் இணைந்த NNKA செய்தி நிறுவனம் கெமால் 49 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், எர்டோகன் 51 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும் கூறியது.

துருக்கிய தேர்தல் முடிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்

ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் துருக்கி அமைந்துள்ளதாலும், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (நேட்டோ) உறுப்பினராக உள்ளதாலும் தேர்தல் முடிவின் தாக்கம் அங்காராவை தாண்டு உலகம் முழுவதும் உணரப்படும். நீண்ட காலமாக நாட்டின் அதிகாரத்தை வைத்திருக்கும் அதிபர் எர்டோகனின் எதேச்சதிகார ஆட்சி தொடருமா அல்லது ஜனநாயக சமுதாயத்தை மீட்டெடுப்பதாக உறுதியளிக்கும் அவரது முக்கிய போட்டியாளரான துருக்கியின் காந்தி என அழைக்கப்படும் கெமால் ஆட்சியைப் பிடிப்பாரா என்பதை இம்முறை தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும். மே 14ஆம் தேதி நாட்டில் நடைபெற்ற முதல்கட்டத் தேர்தலில் எந்த வேட்பாளரும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெற முடியவில்லை.

மேலும் படிக்க | துருக்கி தேர்தல்... துருக்கியின் காந்தி அதிபர் எர்டோகனை வீழ்த்துவாரா...!

தேர்தலில் வாக்களித்துள்ள 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள்

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. துருக்கியில் கருத்துக் கணிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனால் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்த சில மணிநேரங்களில் ஆரம்ப முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தத் தேர்தலில் 6 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர். இஸ்தான்புல்லில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் எர்டோகன், துருக்கியின் வரலாற்றில் இதுவே முதல் அதிபர் தேர்தல் என்றும், இதில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த துருக்கி தேர்தல்

துருக்கி தேர்தலின் முடிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்பதால் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. துருக்கியில் அதிபர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்த தேர்தலில் மொத்தம் 6 கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் 50%க்கு அதிகமான வாக்குகளை பெறும் கட்சியின் தலைவர் மட்டுமே அதிபராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | துருக்கி தேர்தலில் இழுபறி நிலை... 20 வருட கால அதிகாரத்தை தக்க வைப்பாரா எர்டோகன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News