வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், ஒரு புதிய நோய் பரவத் தொடங்கியுள்ளது. மூளை சாப்பிடும் அமீபா (Brain Eating Amoeba) அமெரிக்காவில் பல மரணங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமீபாவின் அறிவியல் பெயர் நெக்லரியா ஃபோலெரி (Naegleria fowleri) . மருத்துவர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை அனைவரும் அது எங்கிருந்து வந்துள்ளது என்று கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
தற்போது, அமெரிக்காவின் (America) தென் மாநிலங்களில் நெக்லீரியா ஃபோலரி அமீபா பரவி வருகிறது. அதன் தொற்றுக்கு காலநிலை மாற்றம் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. நெக்லரியா ஃபோலெரி என்ற இந்த கொடிய அமீபா மூளையை சாப்பிடுகிறது.
மூளையை சாப்பிடும் அமீபா (Naegleria fowleri) பொதுவாக ஏரிகள், ஆறுகள் மற்றும் சூடான நீரூற்றுகள் போன்ற இடங்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த நோய் தாக்கினால், மூளையை உண்ணும் இந்த அமீபாக்களால் உடல் செயலிழக்கிறது. இப்போது வட அமெரிக்க மாநிலங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது என அமெரிக்காவின் (America) நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகின்றன.
ALSO READ | பகீர் தகவல்: பிரிட்டனில் இருந்து சென்னை வந்த பயணிக்கு கொரோனா தொற்று
நெக்லேரியா ஃபோலெரி என்றால் என்ன?
இந்த மூளை உண்ணும் அமீபா ( Naegleria fowleri ) பொதுவாக ஏரிகள், ஆறுகள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது. இது ஒரு ஒற்றை உயிரணு உள்ள உயிரினம். அதன் மூலம் பரவும் தொற்று நோய் மிகவும் ஆபத்தானது. இதன் காரணமாக, மரணம் உறுதி என கூறப்படுகிறது
நெகுலேரியா ஃபோலெரி நோய்த்தொற்றின் அறிகுறிகள் என்ன?
கடுமையான தலைவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஆகியவை நெக்லூரியா ஃபோலரி நோய்த்தொற்றின் முக்கிய அறிகுறிகளாகும். இது தவிர, கழுத்து விறைப்பு, வலிப்பு ஏற்படுதல், மன நோய் மற்றும் கோமா ஆகியவை அடங்கும். நெக்லீரியா ஃபோலெரியின் தொற்று சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கொரோனாவிலிருந்து (Corona) இன்னும் அமெரிக்கா மீளாத நிலையில், இந்த ஆபத்தான தொற்று நோய் பரவல், மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
ALSO READ | ஜல்லி கட்டு காளைகள் கொரோனா தடையை தகர்த்தெரியுமா..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR