ஊனமுற்றது உடல் தான், மனம் இல்லை - கண்கலங்க வைக்கும் Video!

உடல் ஊனமுற்ற ஓர் குழந்தைக்கு முதல் முறையாக ஊஞ்சலில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவரை மட்டும் அல்ல உங்களையும் அந்நிகழ்வு நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை!

Last Updated : Mar 31, 2018, 07:03 PM IST
ஊனமுற்றது உடல் தான், மனம் இல்லை - கண்கலங்க வைக்கும் Video! title=

உடல் ஊனமுற்ற ஓர் குழந்தைக்கு முதல் முறையாக ஊஞ்சலில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவரை மட்டும் அல்ல உங்களையும் அந்நிகழ்வு நெகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ... ஐக்கிய நாடுகளின் அர்கணஸ் பகுதியை சேர்ந்த Trish Allen என்பவர் பதிவிட்டுள்ளார். இவருக்கு 10 வயதில் மகன் ஒருவன் இருக்கின்றார். அந்த மகனால் நடக்க முடியாத காரணத்தால் பல வருடங்களாக சக்கர நாற்காலியில் மட்டுமே வாழ்ந்து வருகின்றார்.

மற்ற குழந்தைகளைப் போல் இவரால் ஓடி ஆடி விளையாட முடியாது. எனவே அவரை வருத்தம் அடையாமல் இருக்க வைக்க அவரது தாயார் Trish Allen பல விஷயங்களை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் தற்போது போர்ட் ஸ்மித் பூங்காவில் சக்கர நாற்காலி கொண்டு விளையாடும் வகையில் ஊஞ்சல் ஒன்றினை ஏற்படுத்தி தன் மகனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளர்.

சுமார் 18 வினாடிகள் மட்டுமே ஒளிப்பரப்பாகும் இந்த வீடியோவினை பார்க்கையில், அனைவரது மனமும் கரைந்துவிடும். உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு கீழே...

 

Trending News