Giant Plant: உலகின் மிகப்பெரிய தாவரம்: 200 கிமீ தொலைவில் வளர்ந்த ராட்சச செடி

பூமியின் மிகப்பெரிய தாவரம் ஷார்க் விரிகுடாவில் பூத்திருக்கிறதாம்! ஆனால் 4500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய தாவரம் இது...  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 1, 2022, 02:19 PM IST
  • உலகின் மிகப்பெரிய தாவரம் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டது
  • 4500 ஆண்டுகள் முன்னரே தோன்றத் தொடங்கிய தாவரம்
  • 200 சதுர கிமீ பரப்பளவில் பரந்திருக்கும் செடி
Giant Plant: உலகின் மிகப்பெரிய தாவரம்: 200 கிமீ தொலைவில் வளர்ந்த ராட்சச செடி title=

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் ஷார்க் விரிகுடாவில் 'பூமியின் மிகப்பெரிய தாவரம்' இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அபூர்வமான தாவரம், 200 சதுர கிமீ பரப்பளவில் பரந்து விரிந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் பூமியின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறும் விஞ்ஞானிகள், சுமார் 200 சதுர கிமீ பரப்பளவில் அது விரிந்துள்ளதாக ஆச்சரியப்படுகின்ரனர்.

இந்த ராட்சதத் தாவரம், Posidonia australis இனத்தைச் சேர்ந்தது. இது ஃபைபர்-பால் தாவரம் அல்லது ரிப்பன் (fibre-ball weed or ribbon weed) என்றும் அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையோரங்களில் காணப்படும் தாவரம் இது.

இந்த ஷார்க் விரிகுடா முழுவதும் ரிப்பன் களைகளில் மரபணு வேறுபாடுகளைத் தேடும் போது விஞ்ஞானிகளுக்கு பல தடுமாற்றங்களும் ஏற்பட்டன.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்ல, சுக்கிரனிலும் உயிர்கள் இருக்கலாம்: விஞ்ஞானிகள்

ஆனால், இறுதியில் 180 கிமீ தொலைவில் உள்ள தளங்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், அவை ஒற்றைத் தாவரம் என்று உறுதிபடுத்தியிருக்கின்றன. பொசிடோனியா ஆஸ்ட்ராலிஸின் பல தாவரம் இது அல்ல என்றும் ஒற்றைத் தாவரம் என்றும் தெரியவந்தது அபூர்வமான கண்டுபிடிப்புதான்.  

இந்த அபூர்வ கண்டுபிடிப்பு பற்றி கூறும் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழக சூழலியல் நிபுணர் டாக்டர் மார்ட்டின் ப்ரீட், "இங்கே என்ன நடக்கிறது?" என்று எங்களுக்கு புரியவில்லை. அனைவருக்கும் திகைப்பும் வியப்பும்தான் ஏற்பட்டது" என்று கூறினார்.

சுமார் 18,000 மரபணு குறிப்பான்களைக் கொண்டு தாவரங்களின் இனங்களின் மாறுபாடுகள் ஆய்வு செய்யப்பட்டன, இது மறுசீரமைப்பு திட்டங்களில் பயன்படுத்த மாதிரிகளைத் தேர்ந்தெடுக்க உதவும் என்று மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் (UWA) மாணவர் ஆராய்ச்சியாளர் ஜேன் எட்ஜெலோ கூறினார்.

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா

ஆனால், வேர்த்தண்டின் கிழங்குகளைப் பயன்படுத்தி பரவிய தாவரம் இது என்பது குறிப்பிடத்தக்கது. புல்வெளி அதன் விளிம்புகளிலிருந்து பரவுவது போலவே இந்த தாவரம் விரிந்து படர்ந்து வளந்துள்ளது. 

"தற்போதுள்ள 200 சதுர கி.மீ ரிப்பன் புல்வெளிகள் ஒரு ஒற்றை, காலனித்துவ நாற்றுகளில் இருந்து விரிவடைந்த தாவரம் என்று தோன்றுகிறது" என்று எட்ஜெலோ கூறினார்.

ராயல் சொசைட்டியின் ப்ரோசீடிங்ஸ் B இல் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிபுணர்களின் கூற்றுப்படி, ரிப்பன் களை வேர்த்தண்டுக் கிழங்குகள் ஆண்டுக்கு 35 செ.மீ வரை வளரும்.

இந்த கணக்கின்படி பார்த்தால், இந்த தாவரம் சுமார் 4,500 ஆண்டுகளாக வளர்ந்திருக்கலாம் என்பது மிகவும் ஆச்சரியமான தகவலாக இருக்கிறது.  

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் பூமியைத் தாக்கக்கூடும்

மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News