பெய்ஜிங்: சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் (PLA) மீது இப்போது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சீன இராணுவத்திற்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இராணுவம் அதன் போர் பயிற்சிகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட ஜின்பிங்க், போருக்கு தயார் நிலையில் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
2012 இன் பிற்பகுதியில் ஜின்பிங்க் ராணுவத்தின் தளபதியாக ஆனதிலிருந்து, போர் தயார்நிலை பயிற்சியின் முக்கியத்துவத்தை அவர் எப்போதும் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்கை தளமாகக் கொண்ட தென் சீனா மார்னிங் போஸ்ட்டின் கூற்றுப்படி, "எந்த நொடியிலும் செயல்பட தயாராக இருக்குமாறு” PLA-விடம் ஜின்பிங்க் கூறியுள்ளார். புதிய உபகரணங்கள், புதிய படைகள், புதிய போர் தளங்கள் மற்றும் பயிற்சி மற்றும் போர் அமைப்புகளில் ஒருங்கிணைப்பதை அதிகரிக்க வேண்டும் என்று சீன அதிபர் கூறியுள்ளதாக அந்த ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.
சீனாவில் (China) ஆயுதப்படைகளின் அதிகாரங்களை விரிவுபடுத்தும் புதிதாக திருத்தப்பட்ட பாதுகாப்பு சட்டம் 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதை குறிக்கும் வகையில் சீன அதிபர் ஜின்பிங்க் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
டிசம்பர் 26, 2020 அன்று, 13 வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு திருத்தப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு முத்திரை இட்டு அதற்கு ஒப்புதல் அளித்தது. அந்த சட்டம் 2021 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
மத்திய இராணுவ ஆணையத்தின் (CMC) தலைமையுடன் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) தலைவராகவும் இருக்கும் ஜின்பிங்க் (Xi Jinping), இராணுவத்தின் வழக்கமான போர் பயிற்சிகள் மற்றும் கூட்டு நடவடிக்கைகளுக்கான பயிற்சி குறித்து வலியுறுத்தினார்.
போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்ற ஜின்பிங்கின் கூற்று எந்த நாடுகளுக்கு அவர் விடுத்துள்ள மறைமுகமான அச்சுறுத்தல் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவுடன் லடாக்கில் (Ladakh) தொடர்ந்து சீன படைகள் மோதலில் ஈடுபட்டுள்ளன. கால்வான் பள்ளத்தாக்கில் சீனா செய்த துரோகத்தையும் சிறுபிள்ளைத் தனத்தையும் உலகமே பார்த்தது.
ALSO READ: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் ரத்து
எனினும் சீனா தன் தவறுகளை ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக அனைத்து விஷயங்களுக்கும் சீனா இந்தியாவையே (India) குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்காவுடனும் சீனாவின் உறவுகள் நல்ல முறையில் இல்லை.
கொரோனா வைரஸ் (Coronavirus) என்னும் கொடிய தொற்று உலகம் முழுதும் பரவி உலக மக்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில், முதன் முதலில் தன் நாட்டில் தோன்றிய அந்த தொற்றின் விவரங்களை மறைத்ததற்காக உலகமே சீனா மீது கடும் கோவத்தில் உள்ளது.
இந்த நிலையில் தன் தவறுகளுக்கு வருந்தாத சீனா, மற்ற நாடுகள் மீது போர் தொடுப்பதிலும், அண்டை நாடுகளின் பிராந்தியங்களை அபகரித்து சொந்தமாக்கிக் கொள்வதிலும்தான் தன் ஈடுபாட்டைக் காட்டி வருகிறது.
எந்த நேரமும் போருக்கு தயாராக இருக்கும்படி சீன படைகளுக்கு தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்க் விடுத்துள்ள அறிவிப்பும் அதை எடுத்துக்காட்டும் வகையிலேயெ உள்ளது.
ALSO READ: இந்தியா-ரஷ்யா S-400 பாதுகாப்பு ஒப்பந்தத்தால் கடுப்பான US: விளைவுகள் பற்றி எச்சரிக்கை
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR