சீன சரக்கு கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் மாயம்!

விபத்தில் 30 ஈரானியர்கள் மற்றும் இரண்டு பங்களாதேஷுகள் உட்பட முப்பத்தி இரண்டு பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Jan 7, 2018, 04:00 PM IST
சீன சரக்கு கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் மாயம்! title=

பெய்ஜிங்: கிழக்கு சீன கடலோர பகுதியில், சரக்கு கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் மாயமாகியுள்ளனர்.

விபத்துக்குள்ளான சரக்கு கப்பல், எண்ணெய் டாங்கர் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 30 ஈரானியர்கள் மற்றும் இரண்டு பங்களாதேஷுகள் உட்பட முப்பத்தி இரண்டு பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பனாமாவில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் டாங்கரானது, சுமார் 136,000 டன் எண்ணெய்க் கசிவுடன் பயணிக்கையில் திடிரென தீபற்றி விபத்துக்குள்ளாகி உள்ளது. நேற்று காலை 8 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாங்சே ஆற்றின் கரையோரத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் 160 கடல் மைல்கள் தொலைவில் நடைப்பெற்ற இந்த விபத்தில், எண்ணெய் டாங்கரில் பயணித்த 32 பேர் காணாமற்போனதாக தெரிகிறது.

அதேசமயம் சரக்குக் கப்பலி பயணித்த 21 பேர் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயமானவர்களை மீட்க சீன கடற்படை அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்புக்காக எட்டு கப்பல்களை அனுப்பியுள்ளனர்.

Trending News