பாஜக மூத்த தலைவரும், மத்திய குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு துறை அமைச்சருமான உமாபாரதி, வரும் 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார்.
தசரா பண்டிகையின் இறுதிநாளான இன்று டெல்லி செங்கோட்டை திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட ராமலீலா நாடகத்தினை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கண்டுகளித்தனர்!
ஓட்டுநர் உரிம எண்ணுடன் அதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் விவாதித்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவில்லை எனவும், இதன் அதிருப்தி காரணமாக மத்திய அமைச்சரவையில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி அமைச்சர்கள் 2 பேரும் இன்று ராஜினாமா செய்வுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு பாராட்டுக்குரியது. இந்திய அரசியலமைப்பின் கீழ் 'தனிநபர் உரிமை என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான்' என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கூறியதாவது, "தனியுரிமைக்கான உரிமைகள் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும் என நாங்கள் கூறியதையே உச்சநீதிமன்றம் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம் என்றும், மேலும் தனிநபர் உரிமை என்பது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் எனவும் கூறினார்.
பாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சன்வர்லால் ஜாட் (62) டெல்லியில் காலமானார்.
உடல்நலக் குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் மரணமடைந்தார்.
ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதியில் இருந்து லோக்சபாவிற்கு தேர்வானர் பாஜக எம்.பி. சன்வர்லால் ஜாட். பிரதமர் கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் முதல் 2016-ம் ஆண்டு ஜூலை வரை நரேந்திர மோடி அமைச்சரவையில் மத்திய நீர்வள துறை இணையமைச்சராக இருந்தவர் சன்வர்லால்.
ஜி.எஸ்.டி வரி குறித்த சிறப்பு கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் இன்று சென்னைக்கு வந்தனர்.
முன்னதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றார்.
ஜெயலலிதா நினைவிடத்தை வணங்கிய அருண் ஜெட்லி, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றனர். அதன்பின் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்துக்கு சென்றனர்.
சென்னை நுங்கம் பாக்கத்தில் மற்றும் காரைக்குடியில் உள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
ரூ.45 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் கார்த்தி சிதம்பரம் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு கடந்த மாதம் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.