தசரா பண்டிகையின் இறுதிநாளான இன்று டெல்லி செங்கோட்டை திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட ராமலீலா நாடகத்தினை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கண்டுகளித்தனர்!
நாடகத்தை கண்டுகளித்த பிரதமர் மோடி, அம்பின் மூலம் ராவணன் கொடும்பாவிக்கு தீயிட்டு கொளுத்தினார். இந்த வழக்கமானது தீமையினை வென்ற நன்மையின் அடையாளம் என கருதப்படுகிறது.
வட மாநிலங்களில் ஆண்டுதோறும் நவராத்திரி மற்றும் துர்கா பூஜை பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டைத் திடலில் இன்று ‘லவ-குசா’ ராமலீலா நாடகம் நடைபெற்றது.
துர்கா பூஜையின் இறுதிநாளில் கொண்டாடப்படும் தசரா பண்டிகையானது விஜயதசமி எனவும் வடமாநிலங்களில் அழைக்கப்படுகிறது. வடகிழக்கு பகுதி மக்களால் விமர்சையாக கொண்டாடப்படும் இந்த பண்டிகை தமிழகம் வரை பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட நாடகத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியில் இவர்களுடன் மத்திய அமைச்சர் ஹர்ச வர்தன், பாஜக. எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பல கலந்துக்கொண்டனர்.
நாடகத்தின் முடிவில் தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராவணன் கொடும்பாவியை மேடையில் நின்றவாறு பிரதமர் மோடி அம்பின் மூலம் தீயிட்டு கொளுத்தினார்.
More glimpses from the Vijayadashami programme in Delhi. pic.twitter.com/CK2FUOYjwU
— Narendra Modi (@narendramodi) October 19, 2018
முன்னதாக இன்று காலை மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபா கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற மோடி அவர்கள் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.