விரைவில் ஓட்டுநர் உரிமத்துடன் இணைகிறது அதார் எண்!

ஓட்டுநர் உரிம எண்ணுடன் அதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் விவாதித்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!

Last Updated : Jun 12, 2018, 04:25 PM IST
விரைவில் ஓட்டுநர் உரிமத்துடன் இணைகிறது அதார் எண்! title=

ஓட்டுநர் உரிம எண்ணுடன் அதார் எண்ணை இணைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் விவாதித்து வருவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்!

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்திவிட்டு வெளி மாநிலங்களுக்கு தப்பிச் செல்லும் நபர்களை எளிதில் பிடிப்பதற்கு இந்த நடைமுறை உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடைமுறை குறித்து முன்னதாக கடந்தாண்டு செப்டம்பர் மாதம் டிஜிட்டல் ஹரியானா மாநாட்டில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், டிரைவிங் லைசென்சுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைப்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதையா காலகட்டத்தில் அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து, புதிய வங்கி கணக்குகளை திறப்பது வரை ஆதார் எண் அவசியமாகி விட்டது.

அரசு சேவைகளுக்கும் சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வங்கி கணக்குகள், பான் கார்டு, ஓய்வூதியம், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் எரிவாயு மானியம், பரஸ்பர நிதி முதலீடுகள் போன்றவற்றை பெற ஆதார் அடையாள எண் வழங்குவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆதாரை கட்டாயமாக்கும் சட்டம் மற்றும் பயோமெட்ரிக் முறை ஆகியவை அரசியல் சாசனத்தின் படி செல்லுப்படி ஆகாது என்று அறிவிக்கக்கோரி பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட தேக்கத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News