கர்பப்பை தானத்தின் மூலம் பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இறந்த பெண்ணில் கர்ப்பப்பையில் இருந்து பிறந்த உலகின் முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது!
துருக்கியில் பாராளுமன்ற ஜனநாயக முறை அமலில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் உருவான ராணுவ புரட்சியை அதிபர் தயீப் எர்டோகன் பொதுமக்கள் உதவியுடன் முறியடித்தார்.
எனவே, அங்கு பாராளுமன்ற ஆட்சிமுறையை ஒழித்து விட்டு அதிகாரங்கள் குவிகின்ற அதிபர் ஆட்சி முறையை கொண்டுவர எர்டோகன் திட்டமிட்டார்.
மக்கள் கருத்தறிய பொது வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. அதில் 5 கோடியே 50 லட்சம் மக்கள் வாக்களித்தனர்.
மொத்தம் 99.45 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் அதிபர் ஆட்சி முறைக்கு 51.37 சதவீதம் பேரும், பாராளுமன்ற ஆட்சி முறைக்கு 48.63 சதவீதம் பேரும் வாக்களித்து இருந்தனர்.
துருக்கி தலைநகரான இஸ்தான்புல்லில் புத்தாண்டு அன்று 39 பேரை சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இஸ்தான்புல் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக உயர்வு; பயங்கரவாதிகள் தென்படவில்லை
துருக்கி நைட் கிளப்பில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு
தென்கிழக்கு துருக்கியில் வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 30 பேர் காயம் அடைந்துள்ளனர். தியார்பாகிர் பகுதியில் வெடிகுண்டு வெடித்து.
துருக்கி நாட்டில் ஆயுதம் ஏந்திய குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இதனையடுத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து உள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இந்த வெடிகுண்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் 30 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
துருக்கியின் சிஸ்ரேவில் வன்முறையை அடக்கும் சிறப்பு படைப்பிரிவின் தலைமையகத்தை குறிவைத்து குர்திஷ் தொழிலாளர் கட்சியை சேர்ந்த பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர். தாக்குதலில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 50-க்கு அதிகமான பேர் காயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் அங்கு நடைபெற்று வருகிறது.
துருக்கியில் ராணுவ தளத்திற்குள் நுழைய முயன்ற 35 தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் குர்தீஸ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற தீவிரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள். துருக்கியின் ஹக்காரியில் நேற்று நடந்த மோதலில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 25 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி நாட்டில் ஜனாதிபதி எர்டோகன் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது. நேற்று அவர் விடுமுறையை கழிப்பதற்காக துருக்கியில் உள்ள கடற்கரை சுற்றுலா தலமான மர்மாரிஸ் எனும் பகுதிக்கு சென்றிருந்தார்.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் தலைமை சர்வதேச விமானநிலையத்தில் 3 தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தங்கள் உடலில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் தலைமை சர்வதேச விமானநிலையத்தில் 3 பயங்கரவாதிகள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இஸ்தான்புல் சர்வதேச விமானநிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த பயணிகளை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர். துப்பாக்கி சூடு சத்தம் கேட்டு அச்சத்தில் உறைந்த பயணிகள் அலறிக்கொண்டு ஓடினர். இதற்கிடையே தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வந்து தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.