மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..!

Brain exercise | உங்கள் மூளை காலை முதல் மாலை வரை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்த 10 பயிற்சிகளை செய்யவும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 24, 2024, 03:44 PM IST
  • தினமும் செய்ய வேண்டிய மூளை பயிற்சிகள்
  • இந்த 6 பயிற்சிகள் செய்தால் மூளை சுறுசுறுப்பாகும்
  • தியானம் மூலம் மைண்ட் மேப்பிங் வரை
மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க இன்றே தொடங்க வேண்டிய 6 உடற்பயிற்சிகள்..! title=

Brain exercise Tamil | மூளைப் பயிற்சி உங்கள் மனதைக் கூர்மைப்படுத்தும், கவனத்தை மேம்படுத்தும், உங்கள் நினைவகத்தை மேம்படுத்தும். உடல் பயிற்சி மூலம் உங்கள் உடலை பலப்படுத்துவது போல, மூளை பயிற்சிகள் உங்கள் மனதை பலப்படுத்த முடியும். தினமும் காலையில் இந்த 6 பயிற்சிகள் செய்து, உங்களையும் மனதை (Brain exercise) நாள் முழுவதும் சுறுசுறுப்பாக்க வைத்துக் கொள்ளுங்கள். 

மூளை பயிற்சிகள்

தியானம் : இந்த பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது, கவனத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் மூளை உங்கள் நிகழ்காலத்தில் வைத்துக்கொள்ளும். கவனச் சிதறல்கள் இருக்கவே இருக்காது. அமைதியான இடத்தில் வசதியான நிலையில் அமரவும். கண்களை மூடிக்கொண்டு உங்கள் உள்ளே இழுத்து வெளியே விடவும். 5-10 நிமிடங்கள் தியானம் பயிற்சி செய்யவும்.

எழுதுவது : காலை முதல் மாலை வரை பிஸியாக இருக்கும் நீங்கள் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு தோன்றுவதை எழுத தொடங்கி, கற்பனைகளுக்கு எழுத்து மூலம் உருவம் கொடுக்கவும். இந்த பயிற்சிகள் உங்கள் சிந்தனைகளை ஒழங்குபடுத்த உதவும். மேலும், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்ற தெளிவான பார்வையையும் உங்களுக்கு கொடுக்கும். 

மேலும் படிக்க | ‘இந்த’ 5 இடங்களில் கம்முன்னு இருந்தா..வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்!

சுடோகு ; இது அற்புதமான விளையாட்டு. சுடோகு தர்க்கரீதியான சிந்தனையைத் தூண்டுகிறது. சிக்கலைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகிறது. இந்த விளையாட்டு உங்கள் மூளையின் பல்வேறு பகுதிகளை ஆக்டிவேட் செய்யும். உங்கள் நினைவகத்தை கூர்மையாக வைத்திருக்க உதவும். தினமும் 15 நிமிடங்கள் வரை விளையாடலாம். 

இரண்டு வேளைகள் : வாய்ப்பாடு அல்லது கணிதம் போட்டுக்கொண்டே பல் துலக்குவது உள்ளிட்ட உங்களின் மற்றொரு வேலையிலும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். இது உங்களின் மூளையின் செயல்பாட்டை மேலும் அதிகரிக்கச் செய்யும். செயல்திறனை மேம்படுத்தும். 

திறமையை வளர்த்துக் கொள்வது : உங்களின் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். ஆடல், பாடல், கணிதம், செஸ், நீச்சல், புதிய மொழி கற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்தி உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்த செயல்முறை உங்களை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ளும். மன உறுதியை அதிகரிக்கும். 

மைண்ட் மேப்பிங் : மைண்ட் மேப்பிங் எண்ணங்களை ஒழுங்கமைக்கிறது, படைப்பாற்றலைத் தூண்டுகிறது, மேலும் சிக்கலான கருத்துகளை சிந்தனையில் காட்சிப்படுத்தும்போது, அதனை இன்னொரு சம்பவத்துடன் இணைக்கும்போது சிக்கல்களை தீர்க்கும் சிந்தனை தெளிவு கிடைக்கும். இந்த பயிற்சியில் 5-10 நிமிடங்கள் செலவிடுங்கள். நினைவகமும் மேம்படும். 

மேலும் படிக்க | செரிமானம் முதல் நினைவாற்றல் வரை: இலவங்கப்பட்டை நீர் அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளின் லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News