கட்சி பணிகளை மீண்டும் தொடர்வேன்: தினகரன்

Last Updated : Jun 3, 2017, 09:53 AM IST
கட்சி பணிகளை மீண்டும் தொடர்வேன்: தினகரன்  title=

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோர் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, டெல்லியிலிருந்து சென்னை புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்:- 

கட்சியிலிருந்து யாரும் நீக்கவில்லை. நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு தான் உண்டு. சிறையிலிருந்த போது தமிழகத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. யாரும் யாருக்கும் பணிந்து போக மாட்டார்கள். எல்லோருடனும் நட்புடன் தான் இருப்பார்கள்.

இவ்வாறு கூறினார்.

Trending News