முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரனின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் இன்று நடைபெற உள்ள கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்களும், தேசியக் கட்சிகளின் மூத்த தலைவர்களும் பங்கேற்கின்றனர்...!
சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் சாலையில் கனமழையால் காரணமாக வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நின்றதில், அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் இரு சிறுமிகள் (யுவஸ்ரீ, பாவனா) உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுமிகள் யுவஸ்ரீ மற்றும் பாவனாவுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
பிரபல இந்தி நடிகர் வினோத் கண்ணா (70) புற்றுநோய் காரணத்தால் காலமானார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக வினோத் கண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பால் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்.
வினோத் கண்ணாவின் மறைவுக்கு இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
அவருடைய மறைவுக்கு ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 70-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மெரினாவில் காந்தியின் திருவுருவப் படத்துக்கு தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் தினமும் ஏராளமான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத சிலர் கதறி அழும் காட்சியையும் பார்க்க முடிகிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான அதிமுக. தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
1931 ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ராமேஸ்வரத்தில் பிறந்தார் இவரது இயற் பெயர் ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம். இவர் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராகவும் மற்றும் விண்வெளி பொறியாளராகவும் பணியாற்றினார். அவரது பிறந்த தினமான இன்று இளைஞர்களின் எழுச்சி தினமாக கொண்டாடப்படுகிறது.
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 85 வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இந்தியனின் சிந்தனையையும் கவர்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.