சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டியில் விளையாடுகிறது.
சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
ஐபிஎல் 2024 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத இருக்கிறது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டி மதியம் 3.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி போட்டி இதுவாகும். இதற்கு அடுத்த போட்டி ஆர்சிபி அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் உள்ளது.
அதேநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் நடப்பு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற இருப்பதாக கூறப்படுகிறது. அப்படியானால், அவர் சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் கடைசி போட்டியாக கூட இது அமைய வாய்ப்புள்ளது.
பிளே ஆஃப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. ஒருவேளை சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்பட்சத்தில் அந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றால் அப்போட்டியில் கூட தோனிக்கு சென்னை சேப்பாக்கத்தில் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம்.
லீக் சுற்றுகள் அடிப்படையில் கணக்கு வைத்தால் சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே விளையாடும் இன்றைய ஐபிஎல் போட்டி தான் தோனியின் கடைசி போட்டியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
அதனால், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு பிரியா விடை கொடுக்க ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர்.