முன்னாள் அமைச்சர் சண்முகம் கட்சித் தொண்டர்களிடையே தேர்தல் தோல்வி குறித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவே தேர்தல் தோல்விக்கு காரணம் என்று சாடுகிறார் முன்னாள் அதிமுக அமைச்சர்...
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிப்பாக தமிழகத்துக்கு நல்லாட்சி தருவார் என்றும், அண்ணன் என்ற முறையில் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பனங்காட்டுப்படை கட்சியின் சார்பாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் ஹரிநாடார் கைது செய்யப்பட்டுள்ளார். அசையும் சொத்தாக அதாவது பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்த ஹரி நாடார் இப்போது இரும்புக் கம்பிக்குள் அடைபட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தெதி நடந்து முடிந்தன. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், ஏப்ரல் 29, வியாழக்கிழமை மாடல் கோட் ஆஃப் காண்டக்ட், அதாவது தேர்தல் நடத்தை விதிமுறை (MCC) நிறைவடைகிறது.
வேளச்சேரியில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு மையத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வாக்குப்பதிவு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார்.
தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களையும், வேட்பாளர் விவரங்களையும் பொது மக்கள் பதிபிறக்கம் செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு வேட்பாளரின் பக்கம் ஒவ்வொரு முறை பதிவிறக்கம் செய்யப்படும்போதும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பொய் வீடியோவை வெளியிட்டதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது போலீசில் புகார் கொடுக்கபட்டுள்ளது.
செந்தாமரை மற்றும் இன்னும் பலரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தமிழகத்தில் "அரசியல் நோக்கத்துடனான பண விநியோகத்தை" பரிசோதிக்கும் நோக்கம் கொண்டவை என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால், அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பாஜகவின் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாஜகவின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக, திமுக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர். அதனை உணர்த்து விதமாக தான், பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி முன் நிற்கிறது.
பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வார். பல்வெறு இடங்களில் நடக்கவிருக்கும் பொதுக் கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.
சென்னையின் அதிகம் பேசப்படும் தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்கு தொகுதி இம்முறையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபலங்கள் போட்டியிடும் இந்த தொகுதியில் எப்போதுமே மக்களின் ஆர்வம் இருப்பது வழக்கம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.