TN Exit Polls: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு, ஆட்சி அமைக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தெதி நடந்து முடிந்தன. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், ஏப்ரல் 29, வியாழக்கிழமை மாடல் கோட் ஆஃப் காண்டக்ட், அதாவது தேர்தல் நடத்தை விதிமுறை (MCC) நிறைவடைகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 30, 2021, 06:25 PM IST
TN Exit Polls: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு, ஆட்சி அமைக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு title=

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தெதி நடந்து முடிந்தன. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், ஏப்ரல் 29, வியாழக்கிழமை மாடல் கோட் ஆஃப் காண்டக்ட், அதாவது தேர்தல் நடத்தை விதிமுறை (MCC) நிறைவடைகிறது. தேர்தலுக்குப் பிறகான பலவித கருத்துக் கணிப்பு ஆய்வுகள் தமிழக சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளை முன்னறிவிக்க தயாராக உள்ளன. 

எம்.ஜி.ராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக, ஜே.ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுக, 2016 ல் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. கட்சி இப்போது தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டு வரலாற்றை ஏற்படுத்தும் முனைப்புடன் உள்ளது. 

அதே நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி, அதிமுக அரசை வீழ்த்தி, தமிழகத்தில் (Tamil Nadu) ஆட்சி அமைப்போம் என்ற முழு நம்பிக்கையுடன் வலம் வருகிறது. 

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்களிப்பு (TN Assembly Election) ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் மே 2 அன்று அறிவிக்கப்படும். 
இந்த தேர்தல் முடிவுகளில் மறைந்துள்ள பல அம்சங்களும் உள்ளன. ஆளும் அதிமுக வெற்றி பெற்றால், அது மாநிலத்துக்குள் பாஜக ஒரு வலுவான இடத்தைப் பெற வழிவகுக்கும். இம்முறை பாஜக-உடன் கூட்டணி வைத்திருந்த அதிமுக வெற்றி பெற்றால், அதுவே பஜக-வுக்கு ஒரு பெரிய உந்துதலாகவும் அங்கீகாரமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

அதே நேரம் திமுக-வின் (DMK) முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதியுமாகத் திகழ்ந்த மு.கருணாநிதி இல்லாமல் திமுக களம்கண்ட முதல் தேர்தல் இதுவாகும். இதில் திமுக வெற்றி பெற்றால் திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராக பதவியேற்க வாய்ப்பு கிடைக்கும்.

ALSO READ: நான்கு மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் திருவிழா

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு மிக விரைவில்...
சிவோட்டர், இந்தியா டுடே-மை ஆக்சிஸ் இந்தியா மற்றும் பல ஆய்வுகள் விரைவில் தமிழக தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளை வெளியிடும்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான தேர்தல்:

- அதிமுக தலைவர் ஜே.ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் மு.கருணாநிதி இல்லாமல் பல தசாப்தங்களுக்குப் பிறகு நடந்த முதல் தேர்தல் இதுவாகும்.
- இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், அது தமிழகத்தில் ஆளும் அரசாங்கம் செய்துள்ள நலத்திட்டங்களுக்கு மக்கள் அளித்துள்ள பெரும் அங்கீகாரமாக பார்க்கப்படும். மேலும், இது பாஜக-வுக்கு தமிழகத்தில் ஒரு நிலையான இடத்தைப் பெற ஒரு நல்ல வாய்ப்பையும் அளிக்கும்.
- திமுக வெற்றி பெற்றால், முக. ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராவார். நீட் தேர்வு, தூத்துக்குடி போராட்டம் என மக்கள் விரோத நடவடிக்கைகள் பல அதிமுக ஆட்சியில் நடந்துள்ளன என கோரி வாக்குக்கேட்ட திமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். 

பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரு திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மாறி மாறி ஆட்சியமைத்து வருகின்றன. திராவிட கோட்டையாக இருக்கும் தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு பெரிய அங்கீகாரம் இல்லை. மாநிலக் கட்சிகளை சார்ந்தே தேசியக் கட்சிகள் தங்கள் இருப்பை வலுப்படுத்திக் கொண்டு வருகின்றன. 2016 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஜே.ஜெயலலிதா அதிமுக-வை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். 

அதுமுக-வுக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக மாறுமா? திமுக-வின் கனவு பலிக்குமா? தெரிந்து கொள்ளலாம், மிக விரைவில்....

ALSO READ: எடப்பாடியா ? ஸ்டாலினா ? தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் ? கருத்து கணிப்புகள் யாருக்கு சாதகம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News