என் தம்பி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்: மு.க. அழகிரி

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிப்பாக தமிழகத்துக்கு நல்லாட்சி தருவார் என்றும், அண்ணன் என்ற முறையில் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 6, 2021, 12:04 PM IST
  • தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று திமுக வெற்றி பெற்றது.
  • திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நாளை காலை பதவியேற்கவுள்ளார்.
  • மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி, முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் தம்பி மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்: மு.க. அழகிரி title=

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று திமுக வெற்றி பெற்றது. திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் நாளை காலை அதாவது, மே 7 அன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். நாளை காலை 9 மணியளவில் மு.க. ஸ்டாலினின் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

திமுக தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து பல அரசியல் தலைவர்களும் முக்கிய பிரமுகர்களும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மு.க. ஸ்டாலினின் சகோதரர் மு.க. அழகிரி, முதல்வராக பதவியேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் தனது வாழ்த்துச் செய்தியில், " திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆனது கண்டு பெருமைப்படுகிறேன். அவர் எனது தம்பி. அவருக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிப்பாக தமிழகத்துக்கு நல்லாட்சி தருவார் என்றும், அண்ணன் என்ற முறையில் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மேலும் தெரிவித்துள்ளார். 

நாளை நடக்கவிருக்கும் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆளுநர் மாளிகையில், இந்த நிகழ்வு எளிமையாக நடக்கவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக மிகச் சிலருக்கே இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கபப்டும் என தெரிகிறது. இந்த விழாவில் 300-க்கும் குறைவானவர்களே கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் (Tamil Nadu Assembly Elections 2021) மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், திமுக 133 இடங்களிலும், அதிமுக 66 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 14 இடங்களையும், பாரதீய ஜனதா கட்சி 4, பாட்டாளி மக்கல் கட்சி 5, விடுதலை சிறுதைகள் கட்சி 4, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களையும் வென்றது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News