சென்னை: தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. வங்க தேசம் மற்றும் அசாமில் அடுத்த கட்டத் தேர்தல்கள் நடகவுள்ளன. அசாமில் மூன்று கட்டங்களிலும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களிலும், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் தேர்தல்கள் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால், அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிகட்ட பரப்புரைகள் முழு முனைப்புடன் நடந்து வருகின்றன. இதற்கிடையில் எப்படியாவது மக்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அரசியல் கட்சிகள் (Political Parties) பல வித உத்திகளை பின்பற்றி வருகின்றன.
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியும், திமுக-காங்கிரஸ் கூட்டணியும் முக்கிய இரு தரப்புகளாக பார்க்கப்படுகின்றன. மாற்று அரசியலைத் தந்து மக்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதாக உறுதி அளிக்கும் அணிகளுக்கும் இந்த தேர்தலில் பஞ்சமில்லை. சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (MNM) அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகள் புடை சூழ, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நாங்கள்தான் சரியான மாற்று என மார் தட்டி வருகிறது. சசிகலா அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நிலையில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் இருக்கும் கட்சி இதுதான் என மேலும் தீவிரமாக களத்தில் குதித்த டிடிவி தினகரன் ஒரு பக்கம் பரபரப்பாய் இயங்கி வருகிறார்.
ALSO READ: "எங்க வீட்டுக்கு நீங்க வருவீங்களா” என்ற சிறுமியின் அழைப்பை ஏற்று அசத்திய அண்ணாமலை
இதற்கிடையில், கடந்த சில தினங்களாகவே, சட்சி பாகுபாடின்றி, பல இடங்களில் பணம், பொருட்கள், மது பாட்டில்கள், தங்க நகைகள் என பறக்கும் படை முறையாக கணக்கில் வராத பலவற்றை கைப்பற்றி வருகிறது. இது ஒருபுறமிருக்க, அவதூறு பேச்சுகளுக்கும், வசைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும், குறைகூறலுக்கும் பஞ்சமில்லாமல் இந்த தேர்தல் பரப்புரைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
உள்ளூர் தலைவர்கள் மட்டுமல்லாமல், காங்கிரஸ், பாஜக என தேசியக் கட்சிகளின் தலைவர்களும் தமிழகம், புதுச்சேரிக்கு படை எடுத்து வந்து தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
மு.க. ஸ்டாலின் (MK Stalin) மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்குமே இது மிக முக்கியமான தேர்தல் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், கமல்ஹாசன், சீமான், டிடிவி தினகரன் ஆகியோரது கட்சிகளின் தாக்கமும் இந்த தேர்தலில் பெரிய அளவில் இருக்கும். இந்த புதிய கூட்டணிகள் வாக்குகளை பிரிப்பதற்கான பணியை கச்சிதமாக செய்து முடிக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்கின்றது.
இன்று மாலை 7 மணியுடன் பரப்புரை அலை ஓயும். அதன் பிறகான அமைதி புயலுக்கு முந்தைய அமைதிதான். ஏப்ரல் 6 ஆம் தேதி மக்கள் யாருக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள்? மே 2 தேதி யார் பக்கம் வெற்றிக் கனி இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்!!
ALSO READ: தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தலைமையில் அமைகிறதா? கருத்து கணிப்பின் முழு விவரம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR